- Advertisement 3-
Homeவிளையாட்டு16 வருசமா நடக்காதத.. மூன்றே போட்டியில் நடத்தி கொடுத்த பவுலர்ஸ்.. தலைநிமிர வைத்த பும்ரா, அர்ஷ்தீப்..

16 வருசமா நடக்காதத.. மூன்றே போட்டியில் நடத்தி கொடுத்த பவுலர்ஸ்.. தலைநிமிர வைத்த பும்ரா, அர்ஷ்தீப்..

- Advertisement 1-

இந்திய அணியை பொறுத்த வரையில் எப்போதும் டி20 போட்டிகள் என வந்துவிட்டால் பந்து வீச்சை விட பேட்டிங்கில் தான் அதிகம் பலமாக விளங்கும். இதனை ஒவ்வொரு டி20 போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணி நிரூபித்து வரும் சூழலில் தான், பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட ஒரு சில வேகப்பந்து வீச்சாளர்களும் அவ்வப்போது நல்ல பங்களிப்பையும் அளித்து வந்துள்ளனர்.

ஆனால் நடப்பு டி20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு மட்டும் இல்லாமல் அனைத்து அணிகளிலுமே பந்து வீச்சாளர்கள் சிறந்து விளங்குவதற்கான ஒரு தொடராகவும் இருந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல பெரிய அணிகளுக்கும் அமெரிக்க மைதானங்கள் மிக புதிதாக இருக்கும் சூழலில், பிட்ச் மிக கடினமாக மாறி உள்ளதும் பெரிய பாதகமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணி மட்டுமில்லாமல் பல அணிகள் 100 ரன்களை கடப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் பந்து வீச்சாளர்களின் கை தான் இந்த முறை அதிகம் ஓங்கியுள்ளது. அமெரிக்காவில் அனைத்து போட்டிகளும் முடிந்த பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் மாற்றம் ஏற்படுமா அல்லது தொடர்ந்து பந்து வீச்சில்தான் தாக்கம் அதிகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படி ஒரு சூழலில் இந்திய அணி மூன்று போட்டியில் வென்றிருந்தாலும் அதில் அதிக பங்கு இருந்தது இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு தான். ஹர்திக் பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் சிங் என அனைவருமே தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்திக் கொள்ள இந்திய அணியின் வெற்றியும் எளிதாக இருந்தது.

- Advertisement 2-

அயர்லாந்து அணியை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்த இந்திய அணியில் பும்ரா அதிக விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். 120 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானை மிக எளிதாக சுருட்டி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது இந்தியா. அப்போதும் பும்ரா முக்கிய விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்த பாகிஸ்தானும் செய்வதறியாமல் குழம்பிப்போனது.

தொடர்ந்து நடந்த மூன்றாவது போட்டியில், பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய அமெரிக்க அணியையும் ஒரு கை பார்த்த இந்தியாவில் அர்ஷதீப் சிங் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையை கிளப்பி இருந்தார். இதன் காரணமாக அவர் ஆட்டநாயகன் விருது வென்றிருந்த நிலையில் இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்கள்.

அப்படி இருக்கையில் முக்கியமான ஒரு சம்பவத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் செய்து பலரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளனர். அதாவது கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மூன்று முறை தான் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளனர். ஆனால் நடப்பு டி20 உலக கோப்பைத் தொடரில் ஆடிய மூன்று போட்டிகளிலுமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்