- Advertisement -
Homeகிரிக்கெட்ஸ்டாய்னிஸ் அதிரடி சதம்.. சேப்பாக்கத்தில் விழுந்த முதல் அடி.. தீபக் சஹர் செஞ்ச தப்பு தான்...

ஸ்டாய்னிஸ் அதிரடி சதம்.. சேப்பாக்கத்தில் விழுந்த முதல் அடி.. தீபக் சஹர் செஞ்ச தப்பு தான் தோல்விக்கு காரணமா..

-Advertisement-

இகானா கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியிருந்த போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்திருந்தது. இந்த போட்டியில் 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ, இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றிருந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு இது ஒரு மிகப்பெரிய தோல்வியாகவும் அமைந்திருந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் இந்த இரண்டு அணிகளுமே தங்களின் அடுத்த லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ருத்துராஜ் மிகச் சிறப்பாக அடி சதமடித்து அசத்தி இருந்தார். அவருக்கு பக்கபலமாக பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி இருந்த ஷிவம் துபே மீண்டும் ஒரு அதிரடி இன்னிங்சை வெளிப்படுத்த, 27 பந்துகளில் 66 ரன் எடுத்து அவுட்டானார்.

ஏழு சிக்ஸர்களை ஷிவம் துபே பறக்க விட்டிருந்த நிலையில் 60 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 108 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார் ருத்துராஜ். இதனால் சென்னை அணியும் 210 ரன்கள் என்ற அபாரமான ஸ்கோரை சேர்த்ததால் சேப்பாக்கம் மைதானத்தில் நிச்சயம் எளிதாக சிஎஸ்கே அணி வென்று விடும் என்று தான் அனைவரும் கருதினர்.

ஆனால் லக்னோ அணியின் பேட்டிங்கில் இவை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி எழுதினார் ஸ்டாய்னிஸ். டி காக் டக் அவுட்டும், ராகுல் 16 ரன்களிலும், படிக்கல் 13 ரன்களிலும் அவுட் ஆகி இருந்தனர். எதிர்பார்த்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக இந்த சீசனில் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் இருந்த ஸ்டாய்னிஸ் மிகச் சிறப்பாக ஆடி பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டிருந்தார்.

-Advertisement-

இதனால் சென்னை அணிக்கும் நெருக்கடி உருவாக கடைசி ஐந்து ஓவர்களில் லக்னோ அணியின் வெற்றிக்கு 74 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது ஷர்துல் தாகூர் வீசிய 16 வது ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட, அடுத்த ஓவரில் பூரான் விக்கெட்டை கைப்பற்றினார் பதிரானா. ஆனாலும், போட்டி லக்னோ கட்டுப்பாட்டில் இருக்க, சதத்தையும் கடந்தார் ஸ்டாய்னிஸ்.

கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட, பதிரானா வீசிய 19 வது ஓவரில் 3 ஃபோர்களுடன் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 6 பந்துகளில் 17 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், இந்த ஓவரை முஸ்தாபிசுர் வீசினார். முதல் 3 பந்துகளில் 3 ஃபோர்கள், ஒரு நோ பால் மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் சேர்க்கப்பட, எளிதாக வென்றது லக்னோ அணி. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவின் முதல் தோல்வியாக இந்த சீசனில் பார்க்கப்பட்டு வரும் நிலையில், 124 ரன்கள் அடித்திருந்தார் ஸ்டாய்னிஸ்.

சிஎஸ்கே எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்த போட்டியில், தீபக் சாஹர் சில எளிதான பவுண்டரிகளை விட்டிருந்தார். ஒரு வேளை அதை தடுத்து சிங்கிளாக மாற்றி இருந்தால் கூட சிஎஸ்கே அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்