- Advertisement 3-
Homeவிளையாட்டுஇளம் வீரருக்காக தோனி போடும் மாஸ்டர் பிளான்.. "12 கோடி வரை போவார்".. ஆரூடம் சொல்லும்...

இளம் வீரருக்காக தோனி போடும் மாஸ்டர் பிளான்.. “12 கோடி வரை போவார்”.. ஆரூடம் சொல்லும் ரவிச்சந்திரன் அஸ்வின்

- Advertisement 1-

சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தது. இந்த தொடரின் ஒவ்வொரு போட்டிகளும் மிக அசத்தலாக சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.

அது மட்டுமில்லாமல், ஏராளமான வீரர்கள் உலக கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடி இருந்தது, ரசிகர்கள் பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்சல், டிராவிஸ் ஹெட், இப்ராஹிம், ரஹ்மத் ஷா, டில்ஷான் மதுஷங்கா உள்ளிட்ட பல வீரர்கள் தங்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்திருந்தனர்.

அப்படி இருக்கையில், இவர்கள் அனைவரின் மீது அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு காரணம், இவர்கள் அனைவருமே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளது தான். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றிய வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் ஒவ்வொரு அணியும் விடுவித்த வீரர்களுடன் ஐபிஎல் ஏலத்திற்காக பெயர்களை பதிவு செய்த வீரர்களும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் ஏல பட்டியலில் இடம்பெறுவார்கள்.

அனைத்து அணிகளின் ரசிகர்களும் தங்களின் பேவரைட் அணிகள், தாங்கள் விரும்பும் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் உள்ளனர். இதனால், ஐபிஎல் ஏல நாள் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போகும். அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு அணிகளும் எப்படிப்பட்ட வீரர்களை ஏலத்தில் குறி வைக்கும் என்பது பற்றியும் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement 2-

அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டி போட போகும் வீரர் குறித்து சில ஆரூடங்களை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரரான ஷாருக் கானை அந்த அணி சமீபத்தில் விடுவித்தது. இதனால், அவர் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவுள்ள சூழலில், அதிரடி வீரரான அவரை அணியில் சேர்க்க கடும் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “ஷாருக்கானுக்காக சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய போரே உருவாகும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால், குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாமல் போனதால் அவரை போல ஒரு பவர் பிளேயர் தேவை. சிஎஸ்கே அணியிலும் ஸ்டோக்ஸிற்கு பதிலாக ஒரு வீரர் தேவைப்படுகிறது.

ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 9 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. அவர் சிறப்பாக ஆடியதாகவே நான் உணர்கிறேன். அவரை பஞ்சாப் அணி விடுவித்தது எனக்கு சரியாக படவில்லை. இந்த ஏலத்தில் அவர் 12 முதல் 13 கோடி ரூபாய் வரை விலை போவார் என நான் நினைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்