- Advertisement 3-
Homeவிளையாட்டுஓய்வுக்கு பிறகு இந்திய தொடரில் கால் பதிக்கும் டேவிட் வார்னர்.. அதுவும் இப்படி ஒரு ரூபத்துலயா..

ஓய்வுக்கு பிறகு இந்திய தொடரில் கால் பதிக்கும் டேவிட் வார்னர்.. அதுவும் இப்படி ஒரு ரூபத்துலயா..

- Advertisement 1-

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் தான் டேவிட் வார்னர். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு நாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் அறிமுகமான டேவிட் வார்னர், மிகச் சிறந்த அதிரடி வீரராக உருவெடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் 2011 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதிலும் நிதானமான ஆட்டத்தைக் கடைபிடிக்காமல் பெரும்பாலான போட்டிகளில் பந்துகளை பவுண்டர்களுக்கு விளாசி தனது ரன்களையும் சேர்த்திருந்தார்.

எந்த அணியினராக இருந்தாலும் வார்னர் பேட்டிங் செய்ய வந்தால் ஒரு பதற்றம் இருக்கும். ஏனென்றால் எந்த மாதிரியான கடின பந்துகள் வந்தாலும் அதனை சமாளித்து ரன் சேர்ப்பதில் கில்லாடி டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் உள்ளிட்ட பல லீக் தொடர்களிலும் ஆடியுள்ள சூழலில் இடது கை பேட்டிங் செய்யக்கூடிய இவர் வலதுகையாக மாறி ஷாட்களை அடிப்பதிலும் தேர்ந்தவர் ஆவார். இதனால் டேவிட் வார்னர் பேட்டிங் செய்வதை பார்த்தாலே எதிரணி பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் ஆடித்தான் போவார்கள்.

அந்த அளவுக்கு ஆபத்தான பேட்ஸ்மேனாக இருந்த டேவிட் வார்னர், சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டேவிட் வார்னர், தொடக்க வீரராக களம் இறங்கி சர்வதேச போட்டியில் அதிக சதமடித்துள்ள பெருமையையும் பெற்றுள்ளார்.

வார்னரின் கடைசி போட்டிக்கு பிறகு ஒட்டுமொத்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் கிரவுண்டுக்குள் வந்து அவரை கொண்டாடி அவரது ஓய்வு காலத்தை நோக்கி மிகச் சிறப்பாக வழியனுப்பி வைத்திருந்தனர் அதே போல தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்ததும் சற்று எமோஷனலாக மாறி இருந்தார் வார்னர். சச்சின் டெண்டுல்கர் தொடங்கி உலகில் உள்ள பல கிரிக்கெட் பிரபலங்கள் வார்னர் ஓய்வு பற்றி நெகிழ்ச்சியான கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

இன்னொரு பக்கம் அவரது ரசிகர்கள் ஓய்வு முடிவால் சற்று வருத்தமடையும் செய்துள்ளனர். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள டேவிட் வார்னர், டி20 போட்டியில் தொடர்ந்து ஆடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், ஓய்வுக்கு பின்னால் உள்ள தனது பிளான் குறித்து பேசுகையில், இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட போவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டு மொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து அவர் ஒதுங்கிய பின்னர் நிச்சயம் வர்ணனையாளராக செயல்படுவர் என தெரிகிறது.

சற்று முன்