- Advertisement 3-
Homeவிளையாட்டுசர்ப்ராஸ் கானை டீம்ல எடுக்காதீங்க... ஊரே கொண்டாடும் வீரரை விமர்சித்த கிரிக்கெட் பிரபலம்.. விஷயம் என்ன..

சர்ப்ராஸ் கானை டீம்ல எடுக்காதீங்க… ஊரே கொண்டாடும் வீரரை விமர்சித்த கிரிக்கெட் பிரபலம்.. விஷயம் என்ன..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தயாராகி விட்டது. இதனிடையே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நாள் முதல் இன்று வரை அவர்கள் ஏராளமான விஷயங்களைக் கடந்து வந்து விட்டனர். இங்கிலாந்தை ஜெயிக்க விட்டதற்காக அதிக விமர்சனம் உருவாகி இருந்த சூழலில் இன்னொரு பக்கம் பல வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி இருந்தனர்.

இப்படி பல விஷயங்கள் நேர்மாறாக இந்திய அணிக்கு நடந்த போதிலும், கேப்டன் ரோஹித் ஷர்மா துவண்டு போகாமல் இளம் வீரர்களை கொண்டு நிச்சயம் இங்கிலாந்து அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிகிறது.

கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டி முடிவில் காயம் காரணமாக விலகியதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணியில் சேர்ந்துள்ளனர். முன்னதாக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகியதால் அவருக்கு பதிலாக ராஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

தற்போது இந்த மூன்று பேரில் இருந்து யார் இந்திய அணியில் இடம் பெறுவார் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் அதிகம் பேர் சர்ப்ராஸ் தான் நிச்சயமாக ஆட வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். முதல் தர போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி பெயர் எடுத்த போதிலும் சர்ப்ராஸ் கானுக்கான வாய்ப்பு இத்தனை நாட்கள் கழித்து தான் இந்திய அணியில் கிடைத்துள்ளது.

- Advertisement 2-

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் சர்பராஸ் கான் ஆட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா, சர்பராஸ் அணியில் இடம் பிடிப்பது பற்றி சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

“கடந்த இரண்டு முதல் மூன்று வருடங்களாக சிறப்பாக ஆடிவரும் சர்பராஸ் கானுக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராகவும் அவர் அதிகமாக ரன்கள் குவித்திருந்தார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வரும் அதே வேளையில் இரண்டு கேள்விகள் முக்கியமாக உள்ளது. முதல் கேள்வி, அவருக்கு ஆடும் லெவனில் யாருக்கு பதிலாக களமிறங்குவார். 15 முதல் 16 பேர் இருக்கும் இடத்தில் 11 வீரர்கள் தான் களமிறங்க முடியும்.

இதேபோல இரண்டாவது கேள்வி, இது போன்ற பெரிய டெஸ்ட் தொடர்களில் சர்ப்ராஸ் கான் ரன்கள் குவிப்பதில்லை என பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். முதல் தர கிரிக்கெட் பத்தி பேசும்போது அதில் மொத்தம் 37 அணிகள் ஆடி வருகிறது. இதில் சராசரியாக உள்ள அணிகளுக்கு எதிராக சர்பராஸ் கான் நிறைய ரன்கள் அடித்திருப்பார். அப்படி இருக்கும் அணிகளை நான் குறைவாக மதிப்பிடவில்லை. அதே போல, சர்பராஸ் கானின் திறனையும் நான் தாழ்த்தி பேசவில்லை. ஆனால் ரன்களுடைய தரம் என்பது மிக முக்கியமானதாகும்” என தீப் தாஸ்குப்தா குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்