- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின், ஜடேஜா ஒழுங்காவே பவுலிங் போடல... பொசுக்குன்னு கொளுத்தி போட்ட தினேஷ் கார்த்திக்..

அஸ்வின், ஜடேஜா ஒழுங்காவே பவுலிங் போடல… பொசுக்குன்னு கொளுத்தி போட்ட தினேஷ் கார்த்திக்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை ஆடி வரும் இங்கிலாந்து அணியால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஆரம்பத்தில் அதிரடியாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த இங்கிலாந்து அணி, போகப் போக இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. இதனால் அவர்கள் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை முதல் நாளிலேயே தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது நாள் இறுதி வரைக்கும் அவுட் ஆகாமல் தொடர்ந்து ஆடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் மிடில் ஆடரில் வந்த கே. எல். ராகுல், தன் பங்குக்கு 86 ரன்கள் சேர்க்க இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 421 ரன்களை இதுவரை சேர்த்துள்ளதுடன் மட்டுமில்லாமல் 175 ரன்கள் முன்னிலையும் வகிக்கின்றனர்.

ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருக்க மூன்றாவது நாளில் இன்னும் அதிக ரன்கள் சேர்த்து அவர்கள் முன்னிலை வகிப்பார்கள் என்றே தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய மூன்று பேரும் சிறப்பாக பந்து வீசவில்லை. அது அவர்களுடைய நாளாக அமையவில்லை என நான் நினைக்கிறேன். ஏனென்றால் இங்கிலாந்து அணியே சில விக்கெட்டுகளை தாங்களாக பறி கொடுத்தனர். வெளியே இருந்து வரக் கூடியவர்களுக்கு இந்திய பிட்ச்சில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததால் அவர்களாகவே விக்கெட்டை இழந்தனர்.

இந்த மூன்று பேரில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு அக்சர் பட்டேல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தார். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் வீசிய பந்துகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தப்பிக்க முடியும் என்றாலும் அக்சர் பந்துகளில் தப்பிக்க முடியாமல் தவித்தனர்” என தெரிவித்துள்ளார்.

முதல் நாளில் இங்கிலாந்து அணி 246 ரன்களில் ஆல் அவுட்டாக காரணமாக இருந்ததே அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தான். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுக்க, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அப்படி இருந்தும் அவர்கள் எப்போதும் போல நன்றாக பந்து வீசவில்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்