- Advertisement 3-
Homeவிளையாட்டுமழை காமிச்ச பயம்.. விக்கெட் இழந்து தவித்த இங்கிலாந்தை சாமி மாதிரி வந்து காப்பாத்திய இளம்...

மழை காமிச்ச பயம்.. விக்கெட் இழந்து தவித்த இங்கிலாந்தை சாமி மாதிரி வந்து காப்பாத்திய இளம் வீரர்.. சுவாரஸ்ய பின்னணி..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பைத் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இன்னும் ஒரு சில முடிவுகள் மட்டுமே தெரிய வேண்டியது பாக்கி உள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு மிக சிறப்பாக முன்னேறி இருந்த நிலையில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் முன்னேறாமல் போனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்திருந்தனர். அதே போல, பாகிஸ்தான் அணி அமெரிக்காவுக்கு எதிராகவும் தோல்வியடைந்திருந்தது.

இதற்கிடையே அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி மழையின் பெயரில் ரத்தானதால் பாகிஸ்தானிற்கான வாய்ப்பும் பறிபோக அவர்கள் லீக் சுற்றுடன் நடையை கட்டி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த முறை மழை அதிகமாக குறுக்கிட்டு வந்த நிலையில், ப்ளோரிடா பகுதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்தது.

இதனால் அங்கே நடைபெற இருந்த மூன்று லீக் போட்டிகள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தாகி இருந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோத இருந்த போட்டியும் மழையால் தாமதமாகி வந்தது. இந்த போட்டி மழையால் ரத்தனால் இங்கிலாந்தின் சூப்பர் 8 வாய்ப்பு பறிபோகும் என்ற சூழலில் தான் மழை பெய்து கொண்டே இருந்தது அவர்களின் ரசிகர்களை அதிகம் வாட்டி வதைத்திருந்தது.

- Advertisement 2-

ஆனால் யாரும் நம்ப முடியாத வகையில் மழை பாதியிலேயே நிற்க போட்டி மீண்டும் ஆரம்பமாகி இருந்தது. 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி ஆரம்பமான சமயத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 13 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்த சூழலில் தான் பேர்ஸ்டோ மற்றும் ஹேரி ப்ரூக் ஆகியோர் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்து ரன்னை ஏற்றி இருந்தனர்.

இதனால் 10 ஓவர்களில் 122 ரன்களை இங்கிலாந்து அணி எடுக்க, தொடர்ந்து ஆடிய நமீபியா அணியால் பத்து ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள சூழலில், ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தால் இவர்களால் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கையில் இந்த போட்டியில் பட்லர், சால்ட் என தொடக்க வீரர்கள் ஏமாற்றிய போது சரியான நேரத்தில் கைகொடுத்தவர் தான் ஹேரி ப்ரூக். 20 பந்துகள் சந்தித்த இவர் நான்கு ஃபோர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடிக்க மிக இளம் வீரராக இருந்து முக்கியமான நேரத்தில் இங்கிலாந்து அணியை காப்பாற்றியதை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.

ஒரு வேளை இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினாலும் அதற்கான காரணமாக நிச்சயம் ஹேரி ப்ரூக் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்