- Advertisement 3-
Homeவிளையாட்டுஜெய்ஸ்வாலுக்கு பதிலா.. வருங்கால கேப்டனுக்கு இடம் கொடுக்காம தப்பு பண்ணிட்டாங்க.. மோர்கன் விரக்தி..

ஜெய்ஸ்வாலுக்கு பதிலா.. வருங்கால கேப்டனுக்கு இடம் கொடுக்காம தப்பு பண்ணிட்டாங்க.. மோர்கன் விரக்தி..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரை பற்றி கடந்த இரண்டு மாதங்களாக அனைவரும் பேசி வந்த நிலையில், தற்போது டி 20 உலக கோப்பை நெருங்கி வருவதால் அனைவரும் இந்த பக்கமும் தங்களின் பார்வையை திருப்பி விட்டனர். இன்னும் பயிற்சி போட்டிகள் கூட ஆரம்பிக்காத நிலையில், டி 20 உலக கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பற்றியும் அரை இறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் யார் என்பது பற்றியும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இப்படி டி20 உலக கோப்பை நெருங்க அது பற்றிய கருத்துக்களும் அதிகம் பரவலாக இருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் டி 20 உலக கோப்பைக்காக தேர்வு செய்த அணி வீரர்கள் பற்றியும் பலவிதமான கருத்துக்களை கிரிக்கெட் பிரபலங்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இயான் மோர்கன், இந்திய அணி குறித்தும் இந்திய அணி தனது அணியில் செய்த ஒரே ஒரு தவறு பற்றியும் சில கருத்துக்களை பேசி உள்ளார். “இந்திய அணியில் இடம் பிடிக்காமல் போன சில வீரர்களை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் தற்போது இருக்கும் அணியே நல்ல தரத்துடன் தான் இருக்கிறார்கள். இதில் சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டாலும் அது இந்திய அணியை பாதிக்கப் போவதில்லை.

சிறந்த வீரர்களைக் கொண்டு மிக வலிமையுடன் இருக்கும் இந்திய அணி, அதனை டி 20 உலக கோப்பை போட்டிகளிலும் பிரதிபலித்தால் நிச்சயம் அவர்கள் ரோஹித் ஷர்மா தலைமையில் கோப்பையை கைப்பற்றுவார்கள். ஆனால் இந்திய அணியை நான் தேர்வு செய்திருந்தால் ஒரேயொரு மாற்றத்தை செய்திருப்பேன். நிச்சயம் நான் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுப்மன் கில்லை தான் தேர்வு செய்திருப்பேன்.

- Advertisement 2-

நான் கில்லுடன் கொல்கத்தாவில் இணைந்து ஆடி உள்ளதால் அவர் எப்படி யோசிப்பார், எப்படி தனது பேட்டிங்கை வெளிப்படுத்த திட்டம் போடுவார் என்பது எனக்கு தெரியும். வருங்கால இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கவும் தகுதி உள்ள கில், தலைமை பண்பை நன்கு அறிந்து கொள்ள உதவும் உலக கோப்பை போன்ற தொடர்களில் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அவர் வெளியே இருந்திருந்தாலும் அதன் மூலம் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டு உத்வேகமாக தன்னை தயார் செய்திருப்பார்” என இயான் மோர்கன் கூறி உள்ளார்.

சற்று முன்