- Advertisement -
Homeகிரிக்கெட்எங்க டீமா இது, நம்பவே முடியல.. அப்படி ஆடுனப்போ மட்டும் பதற்றமா இருந்துச்சு.. பாஃப் வெளிப்படை..

எங்க டீமா இது, நம்பவே முடியல.. அப்படி ஆடுனப்போ மட்டும் பதற்றமா இருந்துச்சு.. பாஃப் வெளிப்படை..

-Advertisement-

முதல் எட்டு போட்டிகளை ஆடி முடித்திருந்த பெங்களூரு அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் தங்களின் வெற்றியை உறுதி செய்திருந்தது. மற்ற 7 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே தழுவி இருந்த பெங்களூரு அணி மீதமிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று நெருக்கடியிலும் இருந்தது.

இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவர்கள் இருந்த ஃபார்மிற்கு அடுத்த ஒன்று இரண்டு போட்டிகள் வெற்றி பெறுவதே மிகப்பெரிய விஷயமாக தான் இருந்தது. ஆனால் இப்படி எல்லாம் தங்கள் மீதிருந்த விமர்சனங்களை உடைத்தெறிந்த ஆர்சிபி அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.

இந்த சீசனில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்த பெங்களூரு அணி, அதே உத்வேகத்துடன் குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து மீண்டும் குஜராத் அணியை தங்களின் சொந்த மைதானமான சின்னசாமியில் சந்தித்த பெங்களூரு, அவர்களின் பேட்டிங் லைன் அப்பை சுக்கு நூறாக்கி இருந்தனர்.

பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட பெங்களூரு அணி, 147 ரன்களில் குஜராத் அணியை ஆல் அவுட் செய்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணி 6 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்திருந்தாலும் அடுத்த 10 முதல் 20 ரன்கள் சேர்ப்பதற்குள் முன் ஆறு விக்கெட்டுகளையும் இழந்து விட்டன. வந்த வீரர்கள் ஒன்றிரண்டு பந்துகளில் அவுட்டாகி வெளியே செல்ல, பெங்களூர் அணி 116 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

-Advertisement-

இருந்தாலும் கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் நிதானமாக ஆடி வெற்றி இலக்கை எட்ட வைத்திருந்தனர். தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்ற குதூகலத்தில் பேசி இருந்த ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், “கடந்த சில போட்டிகளாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அதேபோல ஃபீல்டிங்கிலும் நம்ப முடியாத ஒரு திறனை நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம். பிட்ச்சின் தன்மை எப்படி இருந்தது என்பதை அறிந்து கொண்டு அதைப் பற்றி பவுலரிடமும் சொல்ல வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தோம்.

இங்கே நாங்கள் ஆடிய அனைத்து போட்டிகளிலும் அதிகபட்ச ரன்களை பல அணிகள் அடித்திருந்தது. குறைந்தது 180 முதல் 190 ரன்கள் என்பதுதான் இங்கே சிறந்த ஸ்கோராகவும் இருந்து வந்தது. பேட்டிங் இறங்கிய போது நாங்கள் ஸ்கோர்போர்டை பார்க்காமல் எங்களுடைய வழியில் ஆட விரும்பினோம். ஆரம்பத்தில் சற்று பதட்டமாக இருந்தது.

முதலில் அதிரடியாக ஆடி ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் நான்கு விக்கெட்டுகள் விழுந்ததால் சற்று நிதானமாக ஆடி பின்னர் வெற்றி பெற்றிருந்தோம்” என பாஃப் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்