- Advertisement 3-
Homeவிளையாட்டுகப்பா டெஸ்ட்.. ராஞ்சி டெஸ்ட்.. இந்தியா வரலாறு படைத்த போட்டிக்கு இடையே இருந்த அற்புதமான கனெக்ஷன்.....

கப்பா டெஸ்ட்.. ராஞ்சி டெஸ்ட்.. இந்தியா வரலாறு படைத்த போட்டிக்கு இடையே இருந்த அற்புதமான கனெக்ஷன்.. மிரண்ட ரசிகர்கள்

- Advertisement 1-

இந்திய அணி சமீபத்தில் ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் தொடரையும் சொந்தமாக்கி இருந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மட்டும் வீழ்ந்த இந்திய அணி, அடுத்த மூன்று போட்டிகளில் மீண்டு வந்ததுடன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணிக்கு ஆட்டம் கொடுத்திருந்தது.

அதிலும் இளம் வீரர்களைக் கொண்டு மிக நேர்த்தியாக அவர்களை பயன்படுத்தி இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெற வைத்ததற்காக ரோஹித் செய்த ரகசியம் பலருக்கும் பிடிபடவே இல்லை. இதே மேஜிக்கை அதே இளைஞர்களை கொண்டு கடைசி டெஸ்டிலும் செய்து இந்திய அணியை சாதிக்க வைப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடைசியாக இரண்டு முறை 150 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை நோக்கி டெஸ்டில் இந்திய அணி ஆடிய இரண்டு போட்டிகளில் உள்ள ஒற்றுமை பற்றிய செய்தி, பலரையும் வியப்படைய வைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறும் படைத்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்த தொடரையும் இந்திய அணி சொந்தமாக்கி இருந்தது.

கப்பா டெஸ்டிற்கு பிறகு, 150 + ரன்கள் இலக்கை ராஞ்சியில் தான் இந்தியா அடைந்திருந்தது. இந்த இரண்டு போட்டிகளுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை பார்க்கலாம். கப்பா டெஸ்டில் இந்திய அணியை ரஹானே வழிநடத்தி இருந்தார். அதேபோல ராஞ்சி டெஸ்டில் ரோஹித் வழி நடத்தி இருந்தார். இவர்கள் இருவருமே மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

- Advertisement 2-

அதே போல இந்த இரண்டு போட்டியின் போதும் விராட் கோலி மனைவிக்கு கர்ப்பமாக இருந்ததன் பெயரில் விடுப்பில் இருந்தார். மேலும் இந்த இரண்டு டெஸ்ட்களிலும் ஆடியுள்ள கில், 120 க்கும் அதிகமான பந்துகளை சந்தித்திருந்தார் .

இப்படி பல விஷயங்கள் ஒன்று போல இருக்க இந்த இரண்டிலுமே வெற்றி இலக்கை அடித்துக் கொடுத்தது விக்கெட் கீப்பர்கள் தான். கப்பாவில் ரிஷப் பந்த்தும், ராஞ்சியில் துருவ் ஜூரேலும் வெற்றிக்கான ரன்னை அடித்திருந்தனர். அதே போல, இந்த இரண்டு டெஸ்டிலும் அறிமுகமான வீரர்கள் எடுத்த விக்கெட்டுகளும் மூன்று. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான நடராஜன் மூன்று விக்கெட்டுகள் எடுக்க, தற்போது ராஞ்சியில் நடந்த டெஸ்ட்டில் அறிமுகமான ஆகாஷ் தீப், மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இப்படி கடைசியாக இந்திய அணி, 150 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை நோக்கி ஆடிய போட்டியில் உள்ள ஒற்றுமைகள், பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

சற்று முன்