- Advertisement -
Homeகிரிக்கெட்ரோஹித் சர்மாவிடம் இருக்கும் இந்த ஒரு விடயம் போதும் அவரை சூப்பர் கேப்டன்னு சொல்ல -...

ரோஹித் சர்மாவிடம் இருக்கும் இந்த ஒரு விடயம் போதும் அவரை சூப்பர் கேப்டன்னு சொல்ல – கவுதம் கம்பீர் புகழாரம்

-Advertisement-

தோனி தலைமையிலான இந்திய அணியானது கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் 50 உலகக் கோப்பை தவறவிட்ட இந்திய அணி இம்முறை சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலககோப்பையினை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த தொடரின் 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி பெரிய அளவில் எந்த ஒரு சறுக்களையும் சந்திக்காமல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.

இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றே பலரும் கூறி வருகின்றனர். அதோடு இந்திய அணி பெறும் இந்த தொடர் வெற்றிகளுக்கு ரோஹித் சர்மாவின் சிறப்பான கேப்டன்சியும், அணி வீரர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி இப்படி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கூறுகையில் : ரோகித் சர்மா தற்போது ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், லீடராகவும் அணிக்கு நல்ல பாதுகாப்பை அளித்து வருகிறார்.

-Advertisement-

ஓய்வறையில் இருக்கும் அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதோடு ஒருவரை ஒருவர் ஆதரித்து அவர்களது வெற்றியும் கொண்டாடுகிறார்கள். கேப்டனாக தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் அணியில் உள்ள 14 வீரர்களையும் ரோஹித் சர்மா மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். அதன் காரணமாகவே நமது வீரர்களால் ஒற்றுமையாக இணைந்து விளையாடி வெற்றிகளை பெற முடிகிறது. அதோடு இந்த தொடரில் நடைபெற்று வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் போது கூட அனைவருமே தங்களது பங்களிப்பை வழங்குவது மட்டுமின்றி அனைவருமே ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நின்று அவர்களது வெற்றியையும் கொண்டாடி வருகின்றனர்.

இப்படி வீரர்களுக்குள்ளே இருக்கும் ஒற்றுமையும், ஓய்வறையில் இருக்கும் மகிழ்ச்சியான சூழலும் தான் ரோகித் சர்மாவை ஒரு சிறந்த கேப்டனாக பார்க்க வைக்கிறது. அதோடு நிச்சயம் இந்திய அணி இதே ஆட்டத்தை தொடரும் என்றும் இறுதிப்போட்டியில் எந்த அணி வந்தாலும் அவர்களை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் என்றும் கம்பீர் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்