- Advertisement -
Homeவிளையாட்டு'இப்பவும் சொல்றேன்… ரெஸ்ட் எடுத்து ரிஃப்ரஷ் ஆகுங்க'… ரோஹித்துக்கு கவாஸ்கர் சொல்லும் அட்வைஸ்

‘இப்பவும் சொல்றேன்… ரெஸ்ட் எடுத்து ரிஃப்ரஷ் ஆகுங்க’… ரோஹித்துக்கு கவாஸ்கர் சொல்லும் அட்வைஸ்

- Advertisement-

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் ஆற்றல் இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 184 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அவரின் சராசரி 20+. ஸ்ட்ரைக் ரேட் 129 தான். அதிகபட்ச ஸ்கோர் 65 தான். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அவரின் பேட்டிங் திறமை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் இப்படி இருப்பது பெரிய பின்னடைவாக இருக்கும்.

அவரால் இப்போதெல்லாம் பெரிய இன்னிங்ஸ்கள் விளையாட முடியவில்லை. அவரின் உடல் எடையும் அதிகமாகி தொந்தியும் தொப்பையுமாக காணப்படுகிறார் என்ற விமர்சனங்களும் எழ ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் டக் அவுட் (தொடர்ந்து இரண்டாவது முறை) ஆகி மிக மோசமான சாதனையைப் படைத்தார். அந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலமாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளார் ரோஹித். இதுவரை 237 போட்டிகள் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மாவுக்கு இது 16 ஆவது டக் அவுட் ஆகும். கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ரோஹித் ஷர்மாவை ஓய்வெடுத்து மீண்டும் புத்துணர்ச்சியோடு வருமாறு கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். அதில் “இப்போது, ​​அவர் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ரோஹித் தற்போதைக்கு ஓய்வு எடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தன்னை உடல்தகுதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவேன்.

அவர் இப்போது ஃபார்மில் இல்லாத நிலையில் ஒன்று இரண்டுகளாக ஓடி, பெரிய ஸ்கோரை சேர்க்கவேண்டும்” என அறிவுரைக் கூறும் விதமாக பேசியுள்ளார். ரோஹித் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் மும்பை வீரர் என்பதால் கவாஸ்கர் இனிப்புப் பூசியது போன்ற அறிவுரையையே கொடுத்துள்ளார். ஆனால் கோலி உள்ளிட்ட வீரர்கள் தடுமாறும் போது கவாஸ்கர் நக்கலாக பல கமெண்ட்களை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

சற்று முன்