- Advertisement -
Homeகிரிக்கெட்கோதாவரி அந்த பிபி டேப்ளேட் எடு.. மீண்டும் கடைசி பந்தில் மாறிய கேம்.. ஆடி அடங்கிய...

கோதாவரி அந்த பிபி டேப்ளேட் எடு.. மீண்டும் கடைசி பந்தில் மாறிய கேம்.. ஆடி அடங்கிய குஜராத்..

-Advertisement-

ஐபிஎல் தொடரில் வழக்கம் போல மற்றொரு விறுவிறுப்பான போட்டியும் தற்போது நடந்து முடிந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆரம்பத்தில் சில தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்தாலும் அவ்வப்போது ஒவ்வொரு வெற்றிகளை குவித்து தங்கள் பலமாக இருப்பதை நிரூபித்து வந்தது. 8 போட்டிகள் ஆடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தாலும் ஹைதராபாத்துக்கு எதிராக கடின இலக்கை நோக்கிய அவரது போராட்டம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

அதேபோல லக்னோ மற்றும் குஜராத் அணிக்கு எதிராகவும் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தார்கள். இதனிடையே, குஜராத் அணியை மீண்டும் ஒரு முறை சந்தித்திருந்த நிலையில் இந்த போட்டியில் முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 224 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் மட்டுமில்லாமல் கடைசி மூன்று ஓவர்களில் 67 ரன்களையும் அவர்கள் சேர்த்திருந்ததால், ஐபிஎல் வரலாற்றில் பல முக்கியமான சாதனைகளும் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது.

இதேபோல ரிஷப் பந்த் திரும்ப ஃபார்முக்கு வந்துள்ளதால் உலக கோப்பையிலும் அவருக்கான இடத்தை உறுதி செய்து விட்டதாகவே ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில் கேப்டன் கில், 6 ரன்களில் அவுட்டாக, பின்னர் வந்த சாய் சுதர்சன் அருமையாக ஆடி ரன் சேர்த்தார்.

ஆனாலும் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவர் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் சஹா 39 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்திருந்தார். 13 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை குஜராத் அணி எடுத்திருந்ததால் கடைசி ஏழு ஓவர்களில் 98 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவாகி இருந்தது. களத்தில் அதிரடி வீரர்களான ஷாருக்கான் மற்றும் மில்லர் இருந்ததால் போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதால் இரு அணிகளின் ரசிகர்களும் த்ரில்லர் படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்ப்பது போல அமர்ந்திருந்தனர்.

-Advertisement-

இதனைத் தொடர்ந்து ஷாருக் கான், தெவாட்டியா என அடுத்தடுத்து வீரர்கள் அவுட் ஆனாலும், மில்லர் தனியாளாக போராடி 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் கைவசம் 3 விக்கெட்டுகள் இருக்க, குஜராத் அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது.

இதில் ராசிக் சலாம் வீசிய 19 வது ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் 19 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனை முகேஷ் குமார் வீச, முதல் இரண்டு பந்தில் ஃபோர் அடித்தார் ரஷீத் கான். அடுத்த இரண்டு பந்துகள் டாட் ஆனதால், 2 பந்தில் 11 ரன்கள் வேண்டுமென்ற நிலையும் உருவானது. 5 வது பந்தில் ரஷீத் சிக்ஸ் அடிக்க, போட்டி இன்னும் விறுவிறுப்பாக கடைசி பந்தை டாட் செய்து 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற உதவினார் முகேஷ் குமார்.

இந்த வெற்றியின் மூலம், 9 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்றுள்ள டெல்லி அணி, வரும் போட்டிகளிலும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்