- Advertisement -
Homeகிரிக்கெட்ஜேசன் ராய் சொன்னதையும் கேட்காமல் சுயநலமாய் தவறான முடிவை எடுத்த குர்பாஸ் - டிவிட்டரில் ரசிகர்கள்...

ஜேசன் ராய் சொன்னதையும் கேட்காமல் சுயநலமாய் தவறான முடிவை எடுத்த குர்பாஸ் – டிவிட்டரில் ரசிகர்கள் சாடல்

-Advertisement-

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் சொதப்பல் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தொடர்ந்தது. அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தில் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய கொல்கத்தா அணி பவர்பிளே ஓவருக்குள் 38 ரன்களிலேயே முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அதிலும் குறிப்பாக ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டம் இழந்ததை அடுத்து அவர் செய்த செயலானது தற்போது ட்விட்டரில் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்றுள்ளது. ஏனெனில் ஐந்தாவது ஓவரை வீசிய நாதன் எல்லீசுக்கு எதிராக பேட்டிங் செய்த ரஹமனுல்லா குர்பாஸ் அந்த ஓவரின் நான்காவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகினார். மெதுவாக வீசப்பட்ட அந்த பந்தினை இறங்கி வந்து அடிக்க நினைத்த குர்பாஸ் முற்றிலுமாக பந்தை தவறவிட்டு தனது கால் பகுதியில் வாங்கினார்.

இதனை கண்ட களத்தில் இருந்த அம்பயரும் உடனடியாக அவர் ஆட்டமிழந்ததாக தனது முடிவினை அறிவித்தார். அப்போது எதிர்புறம் ஓடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜேசன் ராயிடம் தான் அவுட்டா என்று விசாரித்தார். அப்போது ஜேசன் ராயும் பந்து பேட்டில் படவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் அவுட் தான் என்பது போல கூறினார்.

ஆனாலும் தான் ஆட்டம் இழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத ரஹ்மனுல்லா குர்பாஸ் ரிவ்யூ செல்வதாக அம்பயரிடம் தெரிவித்தார். பின்னர் இந்த முடிவு மூன்றாவது அம்பயரிடம் செல்லவே மீண்டும் வெளியான ரீப்ளேவில் பந்தினை குர்பாஸ் தவறவிட்டது தெளிவாக உறுதியாகியது. அதோடு பந்து மிடில் ஸ்டெம்பிலும் அடித்தது. இதன் காரணமாக கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு ரிவ்யூ வேஸ்ட் ஆனது.

-Advertisement-

இப்படி தான் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற சுயநலத்தால் ஜேசன் ராய் சொன்னதையும் மீறி குர்பாஸ் ரிவ்யூ கேட்டது தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் அவரை விலாசிய ரசிகர்கள் : இது என்ன சுயநலமான முடிவு. ஜேசன் ராய் அவ்வளவு சொல்லியும் குர்பாஸ் தேவையில்லாமல் ஒரு ரிவ்யூவை இழந்துவிட்டார் என்பது போல பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்