- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவனை திட்டுனதுக்காக.. அரசியல்வாதி மகனால் ஹனுமா விஹாரிக்கு நடந்த கொடுமை.. உண்மை என்ன..

அவனை திட்டுனதுக்காக.. அரசியல்வாதி மகனால் ஹனுமா விஹாரிக்கு நடந்த கொடுமை.. உண்மை என்ன..

- Advertisement 1-

ஒரு பக்கம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் அதே வேளையில், இந்திய வீரருக்கு நடந்த சம்பவம் தொடர்பான செய்தி தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் சிறந்த வீரராக வலம் வந்தவர் தான் ஹனுமா விஹாரி. இளம் வீரர்களின் வருகை காரணமாக புஜாரா போன்ற வீரர்களுக்கு இடம் கிடைக்காத நேரத்தில் அந்த பட்டியலில் உள்ள ஒருவர் தான் ஹனுமா விஹாரி. இவருக்கு சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், சமீபத்தில் இது பற்றி பேசியிருந்தவர் சற்று வேதனையான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனிடையே தற்போது நடந்து வரும் ரஞ்சித் தொடரில் ஆந்திர பிரதேச அணிக்காக ஆடி வந்தார் ஹனுமா விஹாரி. இந்த நிலையில் தான் சமீபத்தில் கேப்டனாக இருந்த தன்னை வேண்டுமென்றே ஒரு வீரருக்காக மாற்றியதாக அவர் தற்போது தெரிவித்துள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி தற்போது ஹனுமா விஹாரி பகிர்ந்திருந்த பதிவின் படி, ரஞ்சித் தொடரின் முதல் போட்டியில் ஆந்திர மாநிலத்தின் கேப்டனாக இருந்தவர், அணியில் இருந்த சக வீரர் ஒருவரை திட்டியதாகவும் தெரிகிறது. இதனால் அரசியலில் பெரும் புள்ளியாக இருக்கும் அந்த வீரரின் தந்தை மாநில வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக விஹாரியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement 2-

மேலும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யுமாறு தன்னிடம் வற்புறுத்தப்பட்டு அதன் பெயரில் தான் விலகியதாகவும் குறிப்பிட்டுள்ள ஹனுமா விஹாரி, பல ஆண்டுகளாக ஆந்திர அணிக்காக சிறப்பாக ஆடி முன்னே வழிநடத்தி சென்ற தன்னை விட தற்போது அந்த இளம் வீரர் தான் முக்கியம் என மாநில வாரியம் கருதுவதால் இனிமேல் ஆந்திரா அணிக்காக தான் விளையாட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது போக சில உருக்கமான கருத்துக்களையும் ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள நிலையில், டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்த அவருக்கு இப்படி ஒரு நிலையா என்றும் ரசிகர்கள் ஏங்கி வந்தனர். மேலும் அரசியல் தலையீடு கிரிக்கெட் போன்ற விளையாட்டில் இருப்பதையும் ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

அப்படி இருக்கையில் தான், சம்மந்தப்பட்ட இளம் வீரர், ஹனுமா விஹாரி சொன்னதில் உண்மையே இல்லை என்றும், அவர் சிம்பதிக்காக இப்படி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு சீனியர் வீரருக்கும், இளம் வீரருக்கும் இடையே வெடித்துள்ள இந்த சம்பவம், பிசிசிஐ வரைக்கும் எதிரொலித்துள்ளதாக தெரிகிறது.

சற்று முன்