- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்துக்கு அடுத்து அஸ்வின் தான் .. இடியாப்ப சிக்கலில் இந்திய அணி.. விமர்சித்த ஹர்பஜன் சிங்..

ரோஹித்துக்கு அடுத்து அஸ்வின் தான் .. இடியாப்ப சிக்கலில் இந்திய அணி.. விமர்சித்த ஹர்பஜன் சிங்..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஆரம்பமே இந்திய அணிக்கு தலைவலியாக தான் அமைந்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவித்த போது இதில் முன்னணி வீரர் விராட் கோலி தேர்வாகி இருந்தார். ஆனால் அவரும் சில தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியில் இருந்து விலக, இளம் வீரரான ராஜாத் படிதார் அவருக்கு பதிலாக இந்திய அணியில் தேர்வானார்.

அதிக பலம் வாய்ந்த அணியாக தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணி இருந்த போதிலும் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் எடுத்த விஸ்வரூபத்தில் இருந்து அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியதன் பெயரில் தோல்வியடைவும் நேரிட்டது. இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களில், இந்திய அணி செய்த தவறுகளை இனி வரும் போட்டிகளில் சரி செய்து கொள்ள பல முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல் ஆகியோரும் காயம் காரணமாக இப்பொழுது விலகி உள்ளது இந்திய அணிக்கு மற்றொரு தலைவலி தான். அவர்கள் விலகியதால் அனுபவம் இல்லாத பல இளம் வீரர்களும் இந்திய அணில் அதிகம் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இது பற்றி தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “இந்திய அணி தற்போது டீசண்டாக தெரிந்தாலும் அதில் அனுபவத்தின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு அடுத்து அதிக ரன் அடித்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார்.

- Advertisement 2-

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ளது என்பதற்கு இதுவே உதாரணம். அஸ்வின், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் இருப்பதால் பந்து அதிகம் டர்ன் ஆகும் பிட்ச்சை தான் இந்திய அணி விரும்பும் என நினைக்கிறேன்.

ஆனால் அதே வேளையில் பந்து அதிகம் திரும்பும் பிட்ச்களை தேர்வு செய்வது இந்திய அணிக்கும் ஆபத்தாக இருக்கலாம். இங்கிலாந்து அணியை வலையில் சிக்க வைக்க முயற்சி செய்து அனுபவம் இல்லாத இந்திய வீரர்கள் பேட்டிங் வரிசை காரணமாக அது இந்திய அணிக்கே தோல்வியாக அமையும். இளம் வீரர்கள் போட்டியில் செட்டில் ஆக சற்று நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஒருவேளை நல்ல பிட்ச் அமைந்தால் மட்டும் அவர்கள் நல்லபடியாக ரன்கள் குவிப்பார்கள்” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சற்று முன்