- Advertisement 3-
Homeவிளையாட்டுஅதுல தான்டா நான் ஸ்பெஷலிஸ்டே.. முதல் இந்திய வீரனாக ஹர்திக் பாண்டியா படைத்த சரித்திரம்..

அதுல தான்டா நான் ஸ்பெஷலிஸ்டே.. முதல் இந்திய வீரனாக ஹர்திக் பாண்டியா படைத்த சரித்திரம்..

- Advertisement 1-

இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கு ஆடிய ஒவ்வொரு வீரர்களும் முக்கிய பங்கு இருந்தாலும், அதில் ஒரு படி மேலே உயர்ந்து நின்றவர் என்றால் நிச்சயம் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கைகாட்டி விடலாம். 3 மாதங்களுக்கு முன்பாக நடந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை போல விமர்சனத்தை சந்தித்த ஒருவர் நிச்சயம் இருந்திருக்க மாட்டார்கள்.

ரோஹித் இடத்தில் கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நுழைந்ததையே ஒரு பெரிய குற்றமாக பார்த்த அந்த அணியின் ரசிகர்களே அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இதனால், போட்டியில் எந்த கவனமும் செலுத்த முடியாமல் அவதிப்பட்ட ஹர்திக்கால் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து நெருக்கடிக்கும் உள்ளானது.

மேலும் மைதானத்திலேயே வந்து ஹர்திக்கிற்கு எதிராக ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, வெளியே சிரித்து கொண்டே நின்ற ஹர்திக் பாண்டியா நிச்சயம் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. அந்த அளவுக்கு ரசிகர்களே நெருக்கடியை கொடுக்க, இதில் இருந்து எப்படி மீண்டு வந்து டி20 உலக கோப்பையில் தனது திறனை நிரூபிப்பார் என்ற கேள்வி தான் அதிகமாக இருந்தது.

ஆனால், இங்கே கேப்டன்சி உள்ளிட்ட எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ரோஹித் ஷர்மா தலைமையில் ஆடியிருந்த ஹர்திக் பாண்டியா, பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தனி முத்திரையை பதித்திருந்தார். மொத்தமாக டி20 உலக கோப்பைத் தொடரில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருந்தார். அத்துடன் தேவைப்படும் நேரத்தில் பல போட்டிகளில் சிறந்த பேட்டிங்கையும் வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement 2-

அதே போல, இறுதி போட்டியின் திருப்புமுனையாக இருந்த ஹென்ரிச் கிளாசன், மில்லர் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி இருந்த ஹர்திக் பாண்டியா, 12 பந்துகள் இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாபிரிக்க அணியின் கோப்பை கனவையும் தகர்த்திருந்தார். ரசிகர்களே தன்னை எதிராக பார்க்கும் போது அதிலிருந்து மீண்டு வருவது என்பது மிக மிக கடினமான காரியம்.

ஆனால், அதிலிருந்து மீண்டு வந்ததுடன் கம்பேக் கொடுப்பது என்றால் இப்படி இருக்கணும் என சொல்லாமல் சொல்லி விட்டு சென்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. இதனிடையே, ஐசிசியின் டி20 ஆல் ரவுண்டர்கள் ரேங்கிங் பட்டியலில் எந்த இந்திய வீரருக்கும் கிடைக்காத சிறப்பு, பாண்டியாவிற்கு கிடைத்துள்ளது.

அக்சர் படேல் மற்றும் ஜடேஜா என இந்திய ஆல் ரவுண்டர்கள், இதற்கு முன்பு அந்த தரவரிசை பட்டியலில் 10 இடங்களுக்குள் பிடித்துள்ளார்கள். ஆனால், தற்போது அவர்களை எல்லாம் தாண்டி முதல் இந்திய வீரனாக, டி20 ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

சற்று முன்