- Advertisement -
Homeகிரிக்கெட்வேதனையில் கண்கலங்கி நின்ற அர்ஸ்தீப் சிங். துள்ளி குதித்த ரிங்கு.

வேதனையில் கண்கலங்கி நின்ற அர்ஸ்தீப் சிங். துள்ளி குதித்த ரிங்கு.

-Advertisement-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று இரவு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி 180 ரன்கள் இலக்கினை கடைசி பந்தில் சேசிங் செய்து அபாரமான வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மீண்டும் ஒருமுறை ரிங்கு சிங் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து கொல்கத்தா அணிக்காக வெற்றியை தேடித்தந்தார்.

கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஃபுல் டாஸ் பந்தை லெக் சைடில் பிளிக் செய்த ரிங்கு சிங் பவுண்டரி அடித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான பினிஷிங்கைக் கண்ட கொல்கத்தா அணியின் வீரர்கள் ஓடி வந்து அவரை கட்டித் தழுவி ஆரவாரமாக கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 6 ரன்களுக்குள் கொல்கத்தா அணியை நிறுத்த வேண்டும் என்பதனால் மிகச் சிறப்பாகவே பந்துவீசினார். குறிப்பாக முதல் பந்தினை டாட் பாலாக வீசிய அவர் அடுத்தடுத்து இரண்டு பந்துகளுக்கு சிங்கிள்ஸ் மட்டுமே விட்டுக் கொடுத்தார். நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் கிடைக்க நான்கு பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே கிடைத்தது.

பின்னர் ஐந்தாவது பாலில் ரசலும் ரன் அவுட் ஆகி வெளியேற கடைசி பந்தில் கொல்கத்தாவின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி பந்தை எதிர் கொண்ட ரிங்கு சிங் அசத்தலான பவுண்டரியை அடித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் கடைசி ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் கடைசி பந்தில் பவுண்டரி விட்டுக் கொடுத்ததால் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு சென்று விட்டார். கடைசி பந்து பவுண்டரிக்கு சென்றதால் கண் கலங்கிய அவர் தரையில் அமர்ந்து சோகமாக காணப்பட்டார்.

-Advertisement-

பின்னர் அவரை தேற்றிய பஞ்சாப் அணி வீரர்கள் அவரை அழைத்துச் சென்றனர். என்னதான் கடைசி பந்தில் ரிங்கு சிங்க்கு எதிராக அர்ஷ்தீப் சிங் பவுண்டரியை விட்டுக் கொடுத்து இருந்தாலும் அவரது அந்த செயல்பாடு மிகச் சிறப்பாகவே இருந்தது. இதனால் ரசிகர்களும் அர்ஷ்தீப் சின் வீசிய அந்த கடைசி ஓவருக்காக அவரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கே.கே.ஆர் பெற்ற இந்த வெற்றியின் மூலம் தற்போது அவர்கள் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்