- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல் மூலமா சுப்மன் கில் சம்பாதிச்சது எத்தனை கோடியா தெரியுமா? இந்த சீசனில் விருதுகள் மூலமாகவே...

ஐபிஎல் மூலமா சுப்மன் கில் சம்பாதிச்சது எத்தனை கோடியா தெரியுமா? இந்த சீசனில் விருதுகள் மூலமாகவே அவர் இத்தனை லட்சங்களை பார்த்துள்ளார்

- Advertisement 1-

இந்த ஐபிஎல் சீசனில் பவுலர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில். இந்த சீசனில் மட்டும் அவர் 3 சதங்கள் உள்பட 870 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். அதுமட்டுமில்லாமல் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலிக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் மட்டுமில்லாமல் தேசிய அணியில் மிகவும் அபாயகரமான வீரராக அவர் உருவாகி வருகிறார். சமீபத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் சதங்கள் அடித்து அனைத்து வித போட்டிகளிலும் தன்னை தேர்வு செய்தது சரியானது என நிரூபித்தார்.

சிஎஸ்கே vs குஜராத் அணிகளுக்கு இடையெ நடந்த இறுதிப் போட்டி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பரபரப்பான இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிகளில் ஒன்றாக நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றிய போதிலும், ஐபிஎல் 2023 இல் தனித்து நின்ற ஒரு வீரராக குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மான் கில் விளங்கினார். இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய அவர் 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.

ஆரஞ்சு தொப்பி மற்றும் ஐபிஎல் 2023 மதிப்பு மிக்க வீரர் என்ற பட்டத்தை வென்றதற்கான மிகப்பெரிய ரொக்கப் பரிசு உட்பட, குஜராத் பேட்டர் ஷுப்மான் கில் இந்த ஆண்டு மொத்தமாக நான்கு ஐபிஎல் 2023 விருதுகளைப் பெற்றார். ஐபிஎல் 2023 மூலம் ஷுப்மான் கில் எவ்வளவு சம்பாதித்தார் என்பது பற்றி தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

- Advertisement 2-

ஷுப்மான் கில் 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் சுப்மன் கில், 2018 முதல் 2021 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடினார். அப்போது அவர் 1.8 கோடி ரூபாய்க்கு அந்த அணியால் 4 வருடங்கள் தக்கவைக்கப்பட்டார். அதன் பிறகு தான் அவரை குஜராத் அணி 8 கோடி ருபாய் கொடுத்து 2022 ஆம் ஆண்டு வாங்கியது. இதன் மூலம் அவரை அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராக ஆக்கியது அந்த அணி.

இதன் மூலம் ஆறு சீசன்களிலும் அவரது மொத்த ஐபிஎல் வருமானம் ரூ.23.2 கோடியாக உயர்ந்துள்ளது. இது தவிர போனஸ் மற்றும் விருதுகளையும் அவர் பெற்று வருகிறார். ஐபிஎல் 2023 இல் ஷுப்மான் கில்லின் ஒரு போட்டிக்கான சம்பளம் சுமார் ரூ.70 லட்சம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் இந்த சீசனில் அவர் ஆரஞ்சு தொப்பி உட்பட நான்கு பட்டங்களை வென்றதற்காக கூடுதலாக அவர் ரூ 40 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

சற்று முன்