- Advertisement 3-
Homeவிளையாட்டுIND vs AUS : இந்த சமயத்துல பதட்டமாகி வெளிய ஓடிட்டன்.. கடைசி வரைக்கும் நகரவே...

IND vs AUS : இந்த சமயத்துல பதட்டமாகி வெளிய ஓடிட்டன்.. கடைசி வரைக்கும் நகரவே இல்ல.. கால் வலிக்குது… அஸ்வின் பேச்சு

- Advertisement 1-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மிகச்சிறந்த ஒருநாள் போட்டிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் சொந்த மண்ணில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் வெறும் 32 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இஷான் கிஷன், ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

தொடர்ந்து விராட் கோலி 12 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென எட்ஜாகி பந்து மேலே பறந்தது. அந்த எளிய கேட்சை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் கோட்டைவிட்டார். இந்த விவகாரத்தால் ஓய்வறையில் இருந்து ஓடி வெளியே வந்ததாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

அஸ்வின் பேசும் போது, விராட் கோலி அடித்த ஷாட் மேலே சென்ற போது, உடனடியாக பதட்டத்தில் ஓய்வறையில் இருந்து வெளியில் ஓடிவந்துவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்த பின் என்னை எழுப்புங்கள் என்று சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டேன்.

- Advertisement 2-

வழக்கமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் எந்த போட்டியும் சாதாரணமாக போட்டியாக இருக்காது. அப்பேர்ப்பட்ட அணியை 199 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெற போகிறோம் என்று எண்ணினேன்.

விராட் கோலியின் கேட்ச்சை விட்டதும் மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் கரகோஷம் எழுப்பினர். பிறகு தான் நான் சுயநினைவை பெற்று மீண்டும் ஓய்வறைக்கு ஓடினேன். பிறகு நான் இந்திய அணியின் பேட்டிங் முடியும் வரை ஒரே இடத்திலேயே நின்ற மேட்சை பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது என் காலில் சற்று வலி கூட உள்ளது என்று கூறியுள்ளார் அஸ்வின்.

சற்று முன்