- Advertisement 3-
Homeவிளையாட்டுஉலகக்கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைப்போம்.. பீதியை கிளப்பும் பாகிஸ்தான் அரசு!

உலகக்கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைப்போம்.. பீதியை கிளப்பும் பாகிஸ்தான் அரசு!

- Advertisement 1-

சில வாரங்களுக்கு முன் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியாகியது. இதில் அக்.5ஆம் தேதி முதல் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நவ.19 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமாக 10 மைதானங்களில் 48 போட்டிகளை நடத்த ஐசிசி அட்டவணை வெளியிட்டது. அதில் அக்.15ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க இந்தியா வருவதற்கான அனுமதியை பாகிஸ்தான் அரசு இதுவரை வழங்கவில்லை. தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியா பயணிப்பதற்கான விவகாரம் குறித்து முடிவெடுக்க 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ஆலோசனை நடத்திய பின்னர், அந்த பரிந்துரைகளை பிரதமரிடம் வழங்கும். இதையடுத்து இறுதி முடிவை பாகிஸ்தான் பிரதமர் தான் எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 11 பேர் கொண்டு குழுவில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் மசாரி, ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால், உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வராது.

ஆசியக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் இலங்கையில் தான் விளையாடவுள்ளது. ஆசியக் கோப்பைத் தொடரை நடத்தும் பாகிஸ்தானில் வெறும் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளையும் நடத்தும் முடிவு ஏற்புடையதல்ல.

- Advertisement 2-

ஆசியக் கோப்பையில் விளையாட இந்திய அணி வேறு நடுநிலையான மைதானத்திற்கு கோரிக்கை வைத்தது போல், பாகிஸ்தான் அணியும் உலகக்கோப்பைத் தொடரை நடுநிலையான மைதானத்தில் நடத்த கோரிக்கை வைக்க வேண்டிய நிலைவரும். ஆனால் உலகக்கோப்பை விவகாரத்தில் பிரதமரே முடிவெடுப்பார்.

ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாட வராததற்கு பாதுகாப்பு காரணங்களை கூறுவது ஏற்புடையதல்ல. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏராளமான அணிகள் பாகிஸ்தான் வந்து விளையாடிவிட்டன. பிஎஸ்எல் தொடரில் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். இந்திய அணி வராததற்கு அரசியல் காரணங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்