- Advertisement 3-
Homeவிளையாட்டுஇன்னும் 4 நாள் தான்.. ஆசிய கோப்பை வாங்கிய கையோடு ஆஸி அணியுடன் மோதப்போகும் இந்தியா.....

இன்னும் 4 நாள் தான்.. ஆசிய கோப்பை வாங்கிய கையோடு ஆஸி அணியுடன் மோதப்போகும் இந்தியா.. முழுமையான அட்டவணை இதோ

- Advertisement 1-

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தினை வென்ற கையோடு நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் அடுத்தாக இன்னும் நான்கு நாட்கள் இடைவெளியிலேயே இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அதற்கு முன்னர் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். உலகக்கோப்பை தொடருக்காக தயாராகும் வகையில் நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அதேபோன்று ஆஸ்திரேலியா அணியும் தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு மூன்று (2-3) என்ற கணக்கில் இழந்த வேளையில் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள இந்த தொடரானது இரண்டு அணிகளுக்குமே முக்கியமான தொடர் என்பதனாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தில் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், மேக்ஸ்வெல் ஆகியோர் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

- Advertisement 2-

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எங்கு நடைபெறுகிறது? எந்தெந்த தேதிகளில் போட்டி நடைபெறுகிறது? என்பது குறித்த முழு தகவலையும் இங்கு காணலாம். அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22-ஆம் தேதி மொஹாலி நகரில் நடைபெற இருக்கிறது.

அதேபோன்று இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 24-ஆம் தேதி இந்தூர் நகரிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 27-ஆம் தேதி ராஜ்கோட் நகரிலும் நடைபெற உள்ளது. மேலும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளுமே பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் ஆட்டம் சரியாக மதியம் 1:30 மணிக்கு ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்