- Advertisement 3-
Homeவிளையாட்டுஎன்னமா நீங்க இப்படி பன்றீங்களேம்மா.. கடைசி ஓவரில் பீதியை கொடுத்த இந்திய வீரர்கள்... அசராமல் அடித்த...

என்னமா நீங்க இப்படி பன்றீங்களேம்மா.. கடைசி ஓவரில் பீதியை கொடுத்த இந்திய வீரர்கள்… அசராமல் அடித்த ரிங்கு சிங்.. இந்தியாவுக்கு பரபரப்பான வெற்றிதான்

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி களமிறங்கியது. விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்பின் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் – ஷார்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரிலேயே அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள், முதல் விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தனர். இதில் ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஸ்டீவ் ஸ்மித் – இங்கிலிஸ் கூட்டணி அதிரடியில் பொளந்து கட்டியது.

சிறப்பாக ஆடிய இங்கிலிஸ் 29 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னாய் இருவரையும் வெளுத்து வாங்கினர். ஒரு கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய இங்கிலிஸ் 50 பந்துகளில் 8 சிக்ஸ் உட்பட 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் ஜெய்ஸ்வால் – கெய்க்வாட் இணை அதிரடியாக பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் செய்த தவறால், ருதுராஜ் கெய்க்வாட் டைமண்ட் டக் அவுட்டாகி வெளியேறினார்.

- Advertisement 2-

தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் 21 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த இஷான் கிஷன் – சூர்யகுமார் ஜோடி அதிரடியாக ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 37 பந்துகளில் அரைசதம் அடிக்க, சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

பின்னர் இஷான் கிஷன் 58 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த திலக் வர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ரிங்கு சிங் – சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினர். இதனால் 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இருப்பினும் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்களே தேவைப்பட்டது. அதன்பின் அடுத்தடுத்து பவுண்டரியை அடித்து கடைசி 4 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அப்போது அக்சர் படேல், ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கடைசி 1 பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் சிக்ஸ் அடித்து வெற்றிபெற வைத்தார்.

சற்று முன்