- Advertisement 3-
Homeவிளையாட்டுஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. நியூசிலாந்து அணியை பழிவாங்கிய இந்திய வீரர்கள்.. அரையிறுதி வேற லெவல் சம்பவம்...

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. நியூசிலாந்து அணியை பழிவாங்கிய இந்திய வீரர்கள்.. அரையிறுதி வேற லெவல் சம்பவம் செய்த ஷமி!

- Advertisement 1-

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சிறப்பாக ஆடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 71 ரன்களை சேர்த்தது. பின்னர் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் விராட் கோலி – சுப்மன் கில் கூட்டணி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 41 பந்துகளில் அரைசதம் அடிக்க, பின்னர் கியரை அதிரடிக்கு மாற்றினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென காலில் பிடிப்பு ஏற்பட்டு ரிட்டையர்ட் ஹர்ட்டாகி 79 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 117 ரன்கள் எடுக்க, இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே – ரச்சின் ரவீந்திர கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முகமது ஷமி பந்துவீச்சில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின் வந்த வில்லியம்சன் – மிட்சல் கூட்டணி இந்திய பவுலர்களை விரட்டி விரட்டி வெளுத்தது. ஒரு கட்டத்தில் யாருக்கு பந்தை கொடுப்பது என்று புரியாமல் ரோகித் சர்மா குழம்பி நின்றார்.

- Advertisement 2-

3வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், முகமது ஷமி வீசிய பந்தில் கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த லேதமும் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். இதன் மூலம் இந்திய அணி ஆட்டத்திற்குள் மீண்டும் வர முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மிட்சல் 85 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

ஆனால் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பின் இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீச தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் ரன் ரேட் அழுத்தம் ஏறிக் கொண்டே சென்ற நிலையில் கிளென் பிலிப்ஸ் 41 ரன்களிலும், தொடர்ந்து வந்த சேப்மேன் 2 ரன்களிலும், சிறப்பாக ஆடிய மிட்சல் 134 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசியில் வந்த டெய்லண்டர்கள் முகமது ஷமியின் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்று அசத்தியுள்ளது. அதேபோல் 2019 உலகக்கோப்பை அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துள்ளது.

சற்று முன்