- Advertisement 3-
Homeவிளையாட்டு40 ஓவர்களாக என்ன செய்தீர்கள்.. கடைசி நேரத்தில் கூட அட்டாக் செய்யவில்லை.. இந்திய ஒழுங்காக ஆடவில்லை.....

40 ஓவர்களாக என்ன செய்தீர்கள்.. கடைசி நேரத்தில் கூட அட்டாக் செய்யவில்லை.. இந்திய ஒழுங்காக ஆடவில்லை.. சீற்றமடைந்த கம்பீர்

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்ற இந்திய அணி 11வது போட்டியில் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா எடுத்த தவறான முடிவுகளே காரணமாக உள்ளது.

முக்கியமாக சூர்யகுமார் யாதவை 7வது வீரராக களமிறக்கி ரோகித் சர்மா செய்த தவறும், வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் 17வது ஓவருக்கு பின் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டதும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ரோகித் சர்மா கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றியதன் விளைவே, தோல்வியடைய காரணமாக உள்ளது.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் கம்பீர் பேசும் போது, உலகக்கோப்பை தொடரில் எப்போதும் தீர்த்துடன் விளையாரும் அணி வெற்றிபெறும். நிச்சயம் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் தான். ஆனால் ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க 40 ஓவர்கள் எடுத்து கொள்வதை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

- Advertisement 2-

6 மற்றும் 7 வரிசையில் வந்த வீரர்கள் அதிரடியாக ஆடி அட்டாக் செய்வார்கள் என்று நினைத்தேன். அப்படி அட்டாக் செய்து 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் உலகக்கோப்பை இறுதியில் 240 ரன்களை டிஃபெண்ட் செய்ய முடியும் என்று நினைத்தது தான் இந்திய அணி செய்த தவறு.

ஒன்று 150 ரன்களில் ஆல் அவுட்டாகி இருக்க வேண்டும் அல்லது 300 ரன்களை சேர்த்திருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் விளையாடியதே இந்திய அணி ஐசிசி தொடர்களில் தோல்வியடைய காரணம். தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்று ரோகித் சர்மா அட்டாக் செய்ய அறிவுறுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்