- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியாவுக்கு ஆரம்பமே அதிரடி.. ஐபிஎல் தொடரில் விமர்சிச்ச வாயை.. டி 20 வேர்ல்டு கப்பில் அடைத்த...

இந்தியாவுக்கு ஆரம்பமே அதிரடி.. ஐபிஎல் தொடரில் விமர்சிச்ச வாயை.. டி 20 வேர்ல்டு கப்பில் அடைத்த ஹர்திக்..

- Advertisement 1-

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் வைத்து டி20 உலக கோப்பை போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல சர்வதேச அணிகளும் அமெரிக்காவில் அதிகம் கிரிக்கெட் போட்டிகள் ஆடியது கிடையாது என்ற நிலையில் டி20 உலக கோப்பையை முன்னிட்டு பல மைதானங்கள் தயாரிக்கப்பட்டும் வந்தது.

இதனால் ஒவ்வொரு பிட்ச்சும் எப்படி எப்படி போட்டிக்கு ஏற்ப செயல்படும் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் குறைந்த ரன்கள் அடித்தால் கூட வெற்றி பெறும் ஒரு வாய்ப்பு தான் அனைத்து மைதானங்களிலும் இருந்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் தான் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தை தங்களின் முதல் லீக் போட்டியில் சந்தித்திருந்தது.

இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து பல்வேறு கணிப்புகள் இருந்து வந்த நிலையில் அயர்லாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஜெய்ஸ்வால் மற்றும் சாஹல் ஆகியோரைத் தவிர 11 வீரர்களும் களமிறங்கி இருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அர்ஷதீப் சிங் விக்கெட்டை எடுத்து இந்திய அணியின் கை அதிகம் ஓங்க வழி செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 50 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை அயர்லாந்து இழந்து தவித்த சூழலில், டெலானி மட்டும் சிறப்பாக ஆடி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அவரும் துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆக 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 96 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது.

- Advertisement 2-

டெலானியை தவிர மற்ற எந்த வீரர்களும் 15 ரன்களை தொடவில்லை. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியில், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருந்தனர்.

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்தார். மறுபுறம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்க, இந்திய அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 52 ரன்களை எடுக்க, அவரது உடம்பில் பந்து பட்டதால் பாதியில் ரிட்டர்ட் ஹர்ட்டாகி இருந்தார்.

இதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் வர, அவர் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அயர்லாந்து நிர்ணயித்த இலக்கை 13 வது ஓவரிலேயே இந்திய அணி இலக்கை எட்டிப் பிடித்து அசத்தியது. மேலும் தங்களின் அடுத்த லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்