- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்கள் அண்டர் டாக்ஸ் தான் பாஸ்.. இந்திய அணி பலம் வாய்ந்ததுதான்.. ஆனால் நாளை என்ன...

நாங்கள் அண்டர் டாக்ஸ் தான் பாஸ்.. இந்திய அணி பலம் வாய்ந்ததுதான்.. ஆனால் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. வில்லியம்சன் பேட்டி

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 4 அணிகள் முன்னேறியுள்ளன. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதற்கு நடப்பு ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ஏற்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசும் போது, நாங்கள் கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். இம்முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளோம். ஆனால் எங்களை அண்டர் டாக்ஸ் என்று எழுதுகிறீர்கள். இதில் பெரிய மாற்றம் இல்லை. ஏனென்றால் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

ஆனால் எந்த அணியாக இருந்தாலும், அன்றைய நாளில் சிறப்பாக ஆடினால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும். அதனால் நாளைய ஆட்டத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். இந்த உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் வெவ்வேறு வகையில் பேலன்ஸாக இருக்கிறார்கள். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்த போதும் , தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார்கள்.

- Advertisement 2-

ஹர்திக் பாண்டியாவின் இடத்தை இந்திய அணி சிறப்பாக நிரப்பியுள்ளது. அதேபோல் நாங்களும் சிறப்பாக தகவமைத்து ஆடி வருகிறோம். எந்த தொடருக்கு வந்தாலும் ரோலை தெளிவாக வீரர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். பேட்டிங், பவுலிங் என்று அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளோம்.

இந்திய அணி சிறப்பாக விளையாடியுள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால் நாங்கள் சிறப்பாக ஆடி இருக்கிறோம் என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் திரும்பியதில் இருந்து அந்த அணியின் செயல்பாடுகளில் கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்