- Advertisement 3-
Homeவிளையாட்டுஉலகக்கோப்பை இறுதியில் வெல்ல இது தேவை.. யாரை நம்பியும் இந்திய அணி இல்லை.. ரவி சாஸ்திரி...

உலகக்கோப்பை இறுதியில் வெல்ல இது தேவை.. யாரை நம்பியும் இந்திய அணி இல்லை.. ரவி சாஸ்திரி அறிவுரை..!

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது. நவ.19ல் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் நடப்பதால், இறுதிப்போட்டியை காண 1.3 லட்சம் ரசிகர்கள் குவிய உள்ளனர். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் தொடர்ந்து வென்று இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணி 8 போட்டிகளில் தொடர்ந்து வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால் எந்த அணி வெற்றிபெறும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஏராளமான போட்டிகளில் சொதப்பலாக அமைந்துள்ளதால், இந்திய அணி எளிதாக வெற்றிபெறும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், உலகக்கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பொறுத்தவரை, யார் சிறப்பாக அழுத்தம் மற்றும் பிரஷரை கையாள்கிறார்களோ, அவர்களே வெல்வார்கள். இறுதிப்போட்டி என்பதால், ஆர்வத்தில் புதிதாக எதையும் செய்ய தேவையில்லை.

- Advertisement 2-

என்னை பொறுத்தவரை இந்திய அணி ஒரு வீரரையோ அல்லது இரண்டு வீரர்களையோ நம்பி இல்லை. இந்திய அணியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் 8 முதல் 9 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதுதான் இந்திய அணியின் சிறப்பு என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 3 பேரும் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

அதேபோல் இந்திய அணியின் பவுலர்களான முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்ட 4 பேரும் குறைந்தபட்சம் 15 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அசத்தியுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா அணியை போல் அல்லாமல் இந்திய அணி யாரையும் நம்பியும் இல்லை என்று பார்க்கப்படுகிறது.

சற்று முன்