- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார்.. டி 20 உலக கோப்பையின் டாப் 4 செஞ்ச தரமான...

ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார்.. டி 20 உலக கோப்பையின் டாப் 4 செஞ்ச தரமான சம்பவம்..

- Advertisement-

நடப்பு ஐபிஎல் சீசன் மிக அமர்க்களமாக நடந்து வரும் நிலையில் இதற்கு முன்பு நிகழ்ந்த பல்வேறு சாதனைகளையும் அடித்து நொறுக்கி உள்ள சரித்திர சம்பவம் இந்த முறை நிகழ்ந்துள்ளது. பேட்டிங்கிற்கு அதிகமாக சாதகம் இருக்கும் இந்த சீசனில் சிக்ஸர்கள், ஃபோர்கள் சர்வ சாதாரணமாக அடிக்கப்பட்டு வருவதுடன் புது புது சாதனைகளையும் உருவாக்கி வருகின்றனர். இந்த சீசனில் ஏராளமான முறை 200 ரன்களுக்கு மேல் கடந்துள்ளது பெரிதாக இருந்தாலும், 250 ரன்களை ஆறு முறைக்கு மேல் அணிகள் கடந்துள்ளது.

ஒரு சமயத்தில் எல்லாம் 250 தொடுவதே கடினமான ரன்னாக இருந்த சூழலில் இன்று அப்படி அடித்தால் அதனை சேஸ் செய்யும் அளவுக்கு கூட ஐபிஎல் ஆகிவிட்டது. இந்தியாவை சேர்ந்த வீரர்களுடன் பல வெளிநாட்டு சர்வதேச வீரர்களும் மிகச்சிறப்பாக ஐபிஎல் தொடரில் ஆடி வருவதால் போட்டிக்கு போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் சென்று வருகிறது.

- Advertisements -

அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி இருந்த போட்டியிலும் கூட பல சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. 40 வயதுக்கு மேல் ஆகும் பியூஷ் சாவ்லா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். இதனால் 173 ரன்கள் மட்டுமே அவர்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய மும்பை அணியும் விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய சூழலில் உள்ளே வந்த சூர்யகுமார் சிறப்பாக ஆடி சதமடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் அவரது இரண்டாவது சதமாகவும் இது அமைந்துள்ள நிலையில் சில முக்கியமான சாதனைகளையும் இந்த சதத்தின் மூலம் தன்வசமாக்கியுள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்திய அணிக்கு இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பையில் சூர்யகுமாரின் ஃபார்ம் நிச்சயம் கை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement-

அப்படி ஒரு சூழலில் தான் இந்த சீசனில் இந்திய அணியின் டி20 உலக கோப்பையில் டாப் 4 பேட்ஸ்மேன்களாக கருதப்படும் வீரர்கள் செய்த சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். தற்போது தேர்வாகியுள்ள இந்தியன் வீரர்களின் படி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாகவும், மூன்றாவது வீரராக கோலியும், நான்காவது வீரராக சூர்யகுமார் யாதவும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத நிலையில் கோலி வசம் ஆரஞ்சு கேப்பும் உள்ளது. சூர்யகுமார் மற்றும் ஜெய்ஸ்வால் என இருவரும் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் தான் இந்த நான்கு பேருமே நடப்பு ஐபிஎல் சீசனில் சதம் அடித்துள்ளனர். இதனால், இந்த சம்பவம் இந்திய அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்