- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியாவுக்கு தான் கப்.. 17 வருஷம் முன்னாடி நடந்த அதே விஷயம்.. தோனி மாதிரியே ரோஹித்...

இந்தியாவுக்கு தான் கப்.. 17 வருஷம் முன்னாடி நடந்த அதே விஷயம்.. தோனி மாதிரியே ரோஹித் தலையில் ஏறப்போகும் கிரீடம்..

- Advertisement 1-

நடப்பு டி20 உலக கோப்பையில் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட எதிர்பார்த்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வீக் சுற்றுடன் வெளியேறி இருப்பதால் இந்தியா உள்ளிட்ட ஒரு சில அணிகளுக்கு மிகப்பெரிய சாதகம் அரையிறுதி போட்டிகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட்ட அணியும் கடந்த சில ஐசிசி தொடர்களாகவே தொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் அரை இறுதி போட்டிகளில் முன்னேறி வந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தினால் சொதப்பி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து வருகிறது.

கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றிருந்த இந்திய அணி, 11 ஆண்டுகளாக பலம் வாய்ந்த அணியாக இருந்த போதிலும் அவர்களால் இதனை மட்டும் நெருங்கவே முடியவில்லை. ஆனால் இந்த முறை அனைத்து ஏரியாக்களிலும் பலமாக இருப்பதால் நிச்சயம் எதிரணிகளை சின்னாபின்னமாக்கி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க் மைதானத்தில் இதுவரை இந்திய அணி ஆடிய 3 லீக் போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும் அது பிட்ச்சின் காரணமாக இருந்ததால் நிச்சயம் சூப்பர் 8 போட்டிகளில் கம்பேக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சு ஏற்கனவே பலமாக இருக்க, பேட்டிங்கிலும் இந்திய அணி மாஸ் காட்டினால் அவர்கள் வேகத்தை நிச்சயம் யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

அப்படி இருக்கையில் சமீபத்தில் இந்தியா மற்றும் கனடா ஆகிய அணிகள் மோதவிருந்த கடைசி லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. புளோரிடாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கே நடைபெற இருந்த மூன்று லீக் போட்டிகளும் ஒரு பந்து கூட வீசாமல் ரத்தாகி இருந்தது.

- Advertisement 2-

அந்த வகையில் இந்திய அணியின் போட்டியும் ரத்தாகி இருந்த சூழலில் இந்த முறை அவர்கள் நிச்சயம் டி20 உலக கோப்பையை கைப்பற்றுவார்கள் என ரசிகர்கள் உற்சாகத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர். ஷிவம்துபே, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்ட பலர் இந்திய அணியில் இணைந்ததுடன் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தலைச்சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.

எப்படிப்பட்ட எதிரணியாக இருந்தாலும் நிச்சயம் மிரட்டலான ஆட்டத்தை இந்திய அணியால் வெளிப்படுத்த முடியும் என்ற சூழலில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை தோனி தலைமையில் வென்றிருந்தனர். அப்போது இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோத இருந்த லீக் போட்டி, மழை காரணமாக ரத்தாகி இருந்தது. அந்த சமயத்தில் இந்திய அணி கோப்பையையும் வென்றிருந்தது.

அப்படி ஒரு நிலையில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்திய அணி ஆட இருந்த போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்தாகி உள்ளது. இதனால் இந்திய அணி இந்த வருடமும் டி 20 உலக கோப்பை கைப்பற்றும் என ரிசிகர்கள் நல்லதொரு ஒற்றுமையை குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்