- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே ஒரு மேட்ச் ஜெயிச்சா பொறுக்காது.. உடனே மும்பை இந்தியன்ஸ் பண்ற மோசமான திட்டம்.. போட்டு...

சிஎஸ்கே ஒரு மேட்ச் ஜெயிச்சா பொறுக்காது.. உடனே மும்பை இந்தியன்ஸ் பண்ற மோசமான திட்டம்.. போட்டு உடைத்த இந்திய வீரர்..

- Advertisement 1-

17 வது ஐபிஎல் தொடர், 2024 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள சூழலில், டிசம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று ஐபிஎல் ஏலம் துபாயில் வைத்து நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது பெயரை ஐபிஎல் ஏலத்திற்காக பதிவு செய்திருந்தனர். ஆனால், இதில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் பெயரை பட்டியலில் இருந்து தூக்கிய நிர்வாகம், இறுதி பட்டியலில் 333 வீரர்கள் மட்டுமே இடம்பெற செய்துள்ளது.

இதில் 214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல, சமீபத்தில் உலக கோப்பைத் தொடரில் ஜொலித்த வீரர்கள் பலரும் இந்த ஏல இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளதால் யார் எந்த அணிக்காக ஆட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போதே உருவாகி உள்ளது.

மேலும் ஐபிஎல் ஆடும் 10 அணிகளுக்காக மொத்தம் 77 வீரர்களுக்கான தேவை இருக்கிறது. அனைத்து அணிகளும் தங்கள் அணியை இன்னும் பலப்படுத்த ஐபிஎல் ஏலத்தில் சிறந்த வீரர்களை தங்கள் அணியில் சேர்க்க முயற்சி செய்யும் என்றே தெரிகிறது. இதனால், நிச்சயம் ஐபிஎல் ஏலம் மற்றும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் என இரண்டுமே நிச்சயம் பட்டாசாய் இருக்கும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் செயல்படுவது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தெரிவித்துள்ள விஷயம், கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளதாக தெரிகிறது. சர்வதேச போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் மோதிக் கொள்வது போல தான், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிகள் இருக்கும்.

- Advertisement 2-

இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொண்டால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அந்த போட்டியை பற்றி தான் பேசி கொண்டு இருப்பார்கள். இது தொடர்பாக பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “மும்பை அணியில் பணிபுரியும் ஒருவர் என்னுடன் பேசும் போது, சிஎஸ்கேவை தான் மும்பை அணி போட்டியாளராக பார்க்கும் என தெரிவித்தார். அதே போல, சிஎஸ்கேவை விட இரண்டு போட்டிகள் அதிகம் வெல்ல வேண்டும் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சிக்குமாம். அதற்காக எந்த எல்லை வரை அவர்கள் போவதாகவும் அந்த நபர் என்னிடம் கூறினார்.

ஒரு முறை மில்லரை எங்களிடம் இருந்து வாங்க மும்பை அணி முயற்சித்தது. பதிலுக்கு எந்த வீரரை நீங்கள் தருவீர்கள் என கேட்டால், உங்களுக்கு எவ்ளோ பணம் வேண்டும் என்று தான் மும்பை அணி திருப்பி கேட்டது” என பரபர கருத்து ஒன்றையும் அஸ்வின் கூறி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, மற்ற அணிகளில் பிரபலமாக இருந்த வீரர்களை வாங்க மும்பை அணி டிரேடிங் முறையில், விதிகளை மீறி பணம் கொடுத்து வாங்க முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்