- Advertisement 3-
Homeவிளையாட்டுமுதல் ஐபிஎல் மேட்ச் சென்னைலயா.. தோனியின் சிஎஸ்கே சந்திக்க போற டீம் இவங்க தான்..

முதல் ஐபிஎல் மேட்ச் சென்னைலயா.. தோனியின் சிஎஸ்கே சந்திக்க போற டீம் இவங்க தான்..

- Advertisement 1-

இந்தியாவில் வைத்து 17 வது ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடர் மார்ச் 11 வரை நடைபெறும் என்பதால் அதன் பின்னர் 10 நாட்கள் ஐபிஎல் தொடரை எண்ணியே ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்க தான் போகின்றனர்.

அது மட்டுமில்லாமல், தோனியை ஐபிஎல் தொடரில் மட்டும் தான் பார்க்க முடியும் என்பதால், அந்த நாளை நினைத்தும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இது போக, இந்திய அணிக்காக பல இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால் அவர்களின் ஆட்டமும் ஐபிஎல் தொடரில் ஜோராக இருக்கும் என தெரிகிறது. அது மட்டுமில்லாமல், கடந்த ஆண்டு உலக கோப்பைத் தொடரில் ஜொலித்த வெளிநாட்டு வீரர்கள் பலரும் கூட ஐபிஎல் தொடரில் தேர்வாகி உள்ளதால் இந்த முறை விருந்துக்கு பஞ்சமே இருக்காது என்று தான் தெரிகிறது.

இது போக, ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் ஜூன் 1 ஆம் தேதியன்று டி 20 உலக கோப்பைத் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து ஆரம்பமாக உள்ளதால், அனைத்து சர்வதேச வீரர்களுக்கும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும் என்றும் தெரிகிறது. டி 20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும் என்றும் தெரிகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, ஐபிஎல் தொடரின் மாஸ் நாயகன் எனப்படும் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 42 வயதாகும் தோனி, இதற்கு மேல் ஐபிஎல் தொடரில் வயதின் அடிப்படையில் ஆட முடியாது என்று தான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனாலும் அவர் அடுத்த சில சீசன்களில் ஆட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

- Advertisement 2-

அப்படி அவர் ஓய்வை அறிவித்தாலும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக தொடர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இதற்கிடையில், இந்த சீசனின் முதல் போட்டி எங்கே நடைபெற உள்ளது என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

இதற்கிடையில், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மோதிய சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறலாம் என்றும் தகவல்கள் மேலும் கூறுகின்றது. தோனி ரசிகர்கள் இந்த தகவலால் கடும் உற்சாகத்திலும் உள்ளனர்.

சற்று முன்