- Advertisement 3-
Homeவிளையாட்டுIPL 2023 Finals : இன்றும் மழை பெய்தால் என்ன நடக்கும்? ரூல்ஸ் சொல்வது என்ன?...

IPL 2023 Finals : இன்றும் மழை பெய்தால் என்ன நடக்கும்? ரூல்ஸ் சொல்வது என்ன? – விவரம் இதோ

- Advertisement 1-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதயிருந்தன. மே 28-ஆம் தேதி நேற்று நடைபெறவிருந்த இந்த இறுதிப்போட்டியானது மழை காரணமாக முற்றிலுமாக தடைபட்டதால் இன்று மே 29-ஆம் தேதி திங்கள் கிழமை ரிசர்வ் டேவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மே 29-ஆம் தேதி இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய போட்டியை போலவே இன்றும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்? என்பது குறித்தே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தெளிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி : இன்றைய இறுதிப்போட்டியானது இந்திய நேரப்படி 7.30 மணி அளவில் துவங்கும். ஒருவேளை இன்றும் மழையால் போட்டி துவங்க தாமதம் ஆனால் இந்த போட்டியானது விதிமுறைப்படி சில மாற்றங்களை சந்திக்கும்.

அதன்படி விதிமுறைக்கு உட்பட்டு குறிப்பிட்ட நேரம் வரை ஓவர்கள் குறைக்கப்படாமல் முழு போட்டி நடைபெற காத்திருப்பார்கள். ஆனால் தொடர்ந்து மழை பெய்தால் நேரத்தின் அடிப்படையில் ஓவர்கள் குறைக்கப்படும். அதற்கான அறிவிப்புகளும் குறிப்பிட்ட சில நிமிட இடைவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

- Advertisement 2-

ஒருவேளை இன்றும் முழுவதுமாக போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஐ.பி.எல் விதிமுறைப்படி போட்டி நடைபெறாமல் போனாலும் குஜராத் அணியே சாம்பியன் பட்டம் பெறும். ஏனெனில் இறுதி போட்டி மழையாலோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ பாதிக்க பட்டாலோ ரிசர்வ் டே வழங்கப்படும். அப்படி வழங்கப்பட்ட ரிசர்வ் டே-விலும் போட்டி நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டால் லீக் சுற்றுகளின் முடிவில் அதிக வெற்றி சதவீத்தை வைத்திருக்கும் அணி சாம்பியன் என்று அறிவிக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: என்னது சிஎஸ்கே தோத்துடுச்சா? மேட்ச் பிக்ஸ் ஏதாவது பண்ணிட்டிங்களா? மைதானத்தில் டிஸ்பிலே செய்த வார்த்தைகளால் சி.எஸ்.கே ரசிகர்கள் குழப்பம்

அந்தவகையில் இன்றும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் லீக் சுற்றுகளின் அடிப்படையில் 14 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்று 20 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும். ஏனெனில் லீக் சுற்றுகளில் சென்னை அணி 14 போட்டிகளில் 8 வெற்றி பெற்று 17 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்