- Advertisement -
Homeகிரிக்கெட்தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி.. வலிக்காக மொத்தம் 6 ஊசிகள்.. நம்மால் அணி தோற்க கூடாது...

தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி.. வலிக்காக மொத்தம் 6 ஊசிகள்.. நம்மால் அணி தோற்க கூடாது என்ற எண்ணம் – இஷாந்த் சர்மா தகவல்

-Advertisement-

இஷாந்த் ஷர்மா பல ஆண்டுகளாக இந்திய அணியில், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு அங்கமாக இருந்து வருகிறார். 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கு பிறகு அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அதுவரை இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார்.

இந்தியாவின் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியில் அவர் சிறந்த பங்கைக் கொண்டிருந்தாலும், இஷாந்தின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை அதன் பிறகு ஒரு சரிவைக் கண்டது. முக்கியமாக காயங்கள் காரணமாக, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவருக்கு ஏற்பட்ட காயங்களின் பின் விளைவுகளில் ஒன்று, சர்வதேச கிரிக்கெட்டில் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அவரால் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை.

இஷாந்த் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெறாமல் போகவும் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அமைந்தன. 34 வயதான அவர் 2014-இல் மெல்போர்ன் டெஸ்டில் விளையாடினார். அது தான் தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி. அந்த போட்டியில் நிகழ்ந்து ஒரு சம்பவம் தான் உலகக் கோப்பை தொடரை தான் இழக்க காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார் இஷாந்த்.

இது சம்மந்தமாக ஒரு யுடியூப் சேனல் உரையாடலில் “நாங்கள் அப்போது ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தோம் எனது வலியின் அளவு மிக அதிகமாக இருந்தது. இதனால் 2015 உலகக் கோப்பையை தவறவிட்டேன். அது மஹி பாயின் (எம்.எஸ். தோனியின்) கடைசி டெஸ்ட் போட்டி, எனக்கு திடீரென முழங்காலில் வலி ஏற்பட்டது, ”என்று கூறியுள்ளார்.

-Advertisement-

மேலும் “அந்த போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் பந்துவீசிக்கொண்டிருந்தனர். ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்றாவது பந்து வீச்சாளர். அவர்கள் தொடர்ந்து பந்துவீசி சோர்வாக இருப்பதைப் பார்த்து, ‘அவர்களும் எவ்வளவு நேரம் பவுலிங் செய்வார்கள்?’ என்று நினைத்து, என் பிசியோவிடம், ‘டாக்டரைக் கூப்பிட்டு ஊசி போடுங்க.’ என்றேன்.

“ஒவ்வொரு செஷனிலும் நான் ஊசி போட்டுக் கொண்டேன். நாங்கள் ஐந்து செஷன்களை வீசினோம். அப்போது நான் ஆறு ஊசிகளை போட்டுக்கொண்டேன். ஏனென்றால் என்னாலேயே எனது அணி தோற்பதை பார்க்க முடியவில்லை. அப்போது எங்கள் பயிற்சியாளராக டங்கன் பிளெட்சர் இருந்தார். ‘ஊசி போடாதே, உலகக் கோப்பை வரப்போகிறது’ என்று அவர் சொல்வார். ஆனால் நான் அவரிடம், ‘நான் அணியை பவுலிங் செய்யாமல் ஏமாற்றுவது போல் உணர்கிறேன்.” என தான் உலகக் கோப்பையை தவறவிட்ட காரணத்தைக் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்