- Advertisement 3-
Homeவிளையாட்டுகேப்டனாக முதல் வெற்றி.. பெருமையாக இருக்கு.. இஷான் கிஷனிடம் சொன்னது அது மட்டும்தான்.. சூர்யகுமார் யாதவ்...

கேப்டனாக முதல் வெற்றி.. பெருமையாக இருக்கு.. இஷான் கிஷனிடம் சொன்னது அது மட்டும்தான்.. சூர்யகுமார் யாதவ் பேட்டி

- Advertisement 1-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 208 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய இங்கிலிஸ் 50 பந்தில் 110 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 41 பந்தில் 52 ரன்களும் சேர்த்தனர்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்து த்ரில் வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷன் 58 ரன்களும், ரிங்கு சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 22 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றியை பற்றி சூர்யகுமார் யாத பேசும் போது, இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பிரஷரில் இருந்து சிறப்பாக வெளி வந்தனர். அதனை பார்க்கவே பெருமையாக இருந்தது. அதேபோல் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக விளையாடி இருக்கிறேன். சிறுவயதில் பேட்டை தொட்டாலே, ஒருநாள் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது தான் அனைத்து ரசிகர்களின் கனவாக இருக்கும்.

இப்போது இந்திய அணிக்காக விளையாடுவதோடு, கேப்டனாகவும் செயல்பட்டது என் வாழ்வின் பெருமைமிக்க தருணம். விசாகப்பட்டினம் மைதானத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பனிப்பொழிவு இல்லை. இந்த மைதானம் அளவில் பெரியது அல்ல. அதனால் பேட்டிங் ஆடுவதற்கு எளிதாக இருக்கும் என்று முன்பே கணித்திருந்தேன். ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ததை பார்த்த போது, 230 ரன்களுக்கும் அதிகமாக விளாசுவார்கள் என்று நினைத்தேன்.

- Advertisement 2-

ஆனால் 16வது ஓவருக்கு பின் எங்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இதனால் அவர்களை 208 ரன்காளில் கட்டுப்படுத்த முடிந்தது. இஷான் கிஷன் களத்தில் நிதானமாக விளையாடிய போது, நான் வந்தேன். அப்போது அவரிடம் மகிழ்ச்சியாக விளையாட அறிவுறுத்தினேன். ஏனென்றால் எனக்கு என்ன நடக்கும் என்பது நன்றாக தெரியும். பிரான்சைஸி கிரிக்கெட்டில் ஏராளமான முறை இதேபோன்ற தருணங்களில் விளையாடி இருக்கிறோம்.

எனது பேட்டிங்கின் போது ஓய்வறையிலேயே கேப்டன் என்ற எண்ணத்தை வைத்துவிட்டு தான் களமிறங்குவேன். அதேபோல் ரிங்கு சிங் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆடினார். நான் கொஞ்சம் பயமாக விளையாடி போது என்னையும் சாந்தப்படுத்தினார். இந்த சூழல் அவருக்காக அமைந்த சூழல் என்று நினைக்கிறேன். அதனை முடிக்க அவர் தான் பொறுத்தமானவர் என்று தெரிவித்தார்.

சற்று முன்