- Advertisement 3-
Homeவிளையாட்டுஒரு விக்கெட் எடுக்கல, ஒரு ரன்னும் அடிக்கல, கேட்சும் புடிக்கல.. கோலி மாதிரியே ஜடேஜாவுக்கு வந்த...

ஒரு விக்கெட் எடுக்கல, ஒரு ரன்னும் அடிக்கல, கேட்சும் புடிக்கல.. கோலி மாதிரியே ஜடேஜாவுக்கு வந்த பரிதாப நிலை..

- Advertisement 1-

இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தாலும் அந்த அணியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது என்பதுதான் உண்மை. பந்து வீச்சை பொருத்தவரையில் பிட்ச்கள் வேகப்பந்து வீச்சுக்கு தான் அதிகம் சாதகமாக இருந்து சூழலில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா என அனைவருமே நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இனிவரும் போட்டிகளில் பிட்ச் மாறும் பட்சத்தில் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் இந்திய அணியில் பெரிய அளவுக்கு குறைகள் எதுவும் இல்லாத சூழலில் பேட்டிங் வரிசை தான் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போயுள்ளது.

நியூயார்க்கில் உள்ள பிட்ச் மற்றும் மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அங்கே இந்திய அணி ரன் குவிப்பதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்பது தான் உண்மை. இந்த மூன்று போட்டிகளிலுமே விராட் கோலி ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டான சூழலில் தொடக்க வீரராக அவர் இறங்குவதால் தான் பிரச்சனையாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம் முதல் போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த இரண்டு போட்டியில் குறைந்த ரன் எடுத்து அவுட்டானார். இதேபோல ரிஷப் பந்த் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் நிலையில் இவர்களை தவிர மற்ற வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறி வருகின்றனர்.

- Advertisement 2-

மறுபுறம் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய சூர்யகுமார் மற்றும் ஷிவம் துபே அமெரிக்காவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றி பெற வைத்திருந்தனர். அப்படி இருக்கையில், அணியில் தேர்வான போது பலரது எதிர்பார்ப்புக்குள்ளான ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விக்கெட் எடுக்கவும் ரன் சேர்க்கவும் தடுமாறி வருகிறார்.

அயர்லாந்துக்கு எதிராக அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போதிலும் அந்த போட்டியில் பந்து வீசி இருந்தவர் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒருமுறை விக்கெட்டுகள் எதுவும் எடுக்காத ஜடேஜா, முதல் பந்திலே அவுட்டாகி அதிர்ச்சி அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அமெரிக்க அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்து போட்டியில் பேட்டிங்க்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காத நிலையில் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. பந்து வீசாமல், பேட்டிங் செய்யாமல் அணியில் இருப்பதற்கு ஜடேஜாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது குல்தீப் யாதவ், சாஹல் உள்ளிட்டோரின் யாரையாவது ஆட வைத்திருக்கலாம் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

அப்படி நடக்கும் பட்சத்தில் தற்போது இருப்பதை விட இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இன்னும் பலத்துடன் விளங்கும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

சற்று முன்