- Advertisement 3-
Homeவிளையாட்டுமுரளிதரன் வரிசையில் ஜோ ரூட்.. இந்திய அணி செய்ய போகும் மிக பெரிய தப்பு.. மாட்டிக்...

முரளிதரன் வரிசையில் ஜோ ரூட்.. இந்திய அணி செய்ய போகும் மிக பெரிய தப்பு.. மாட்டிக் கொண்ட ரோஹித்..

- Advertisement 1-

எந்த நேரத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததோ அன்று முதல் இன்று வரை கிரிக்கெட் உலகில் பிரபலமாக இருக்கும் அனைவரின் விமர்சனங்களையும் அவர்கள் சம்பாதித்து விட்டனர். அந்த அளவுக்கு தொடர்ந்து இந்திய மண்ணில் ரோஹித் அண்ட் கோ தோல்வி அடைந்ததற்காக பலரும் அவர்களை மிக மோசமாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மற்றொரு வாய்ப்பாக ரவீந்திர ஜடேஜா, கே.எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்காமல் போனது மற்றொரு சாதகமாகவும் மாறி உள்ளது. ஏற்கனவே இவர்கள் இரண்டு பேர் இருந்த போதிலும் இந்திய அணியால் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியாமல் போனது.

இதற்கு மத்தியில் சுமார் ஏழு முதல் எட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி எப்படி இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தப் போகிறது என்பதற்கு ஏராளமான உத்திகளை கையாள வேண்டிய நெருக்கடியான நிலையிலும் உள்ளது. இதனால் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மீதான பாரமும் அதிகரித்துள்ள சூழலில் லரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் இந்திய வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா. இந்திய அணி பற்றி சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். “இந்திய அணியில் சுயமாக சந்தேகங்களே அதிகம் உள்ளது. நாம் ஒரு சிறந்த பிட்ச்சை தயார் செய்தால் இங்கிலாந்து அணி நம்மை விட சிறப்பாக ஆடி விடும். கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மோசமான ஃபார்மில் உள்ளனர். ராகுல், விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோர் இந்திய அணியில் இல்லை.

- Advertisement 2-

திடீரென நீங்களும் செய்வதறியாமல் தடுமாறி நிற்கிறீர்கள். ஆனால் இந்திய அணி நிச்சயம் சிறந்த பிட்ச்சில் தான் ஆட வேண்டும். நாம் பந்து திரும்பும் பிட்ச்சில் ஆடினால் உற்சாகமடையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் நமது அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இரண்டு அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களும் ஏறக்குறைய சமமாக விளங்குவார்கள்.

அப்படி இருந்தும் நீங்கள் வெல்வதற்கு சாதகமாக இருக்கும் பிட்ச்சை தேர்வு செய்தால் இங்கிலாந்தின் டாம் ஹாட்லி பிஷன் பேடியாகவும், ஜோ ரூட் முத்தையா முரளிதரனாக மாறவும் வாய்ப்பு உள்ளது” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். டெஸ்டில் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட், இந்திய மைதானங்களில் ஆடும் போது சுமார் 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி தனது பகுதி நேர பந்து வீச்சின் மூலம் தொடர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

சற்று முன்