- Advertisement 3-
Homeவிளையாட்டுநீங்க வேணா பாருங்க.. அவங்க தான் ஐபிஎல் ஜெயிக்க போறாங்க.. இது தான் ட்விஸ்ட்டா இருக்கும்.....

நீங்க வேணா பாருங்க.. அவங்க தான் ஐபிஎல் ஜெயிக்க போறாங்க.. இது தான் ட்விஸ்ட்டா இருக்கும்.. பீட்டர்சன் கணிப்பு..

- Advertisement 1-

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று ஆரம்பமாகி இருந்தது. மொத்தமுள்ள 10 அணிகளில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பற்றியும் யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பது பற்றியும் பல்வேறு விதமான கணிப்புகள் இருந்து வந்தது.

அந்த வகையில் இதன் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதில் எலிமினேட்டர், குவாலிஃபயர் 1 மற்றும் 2 ஆகிய போட்டிகளின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்ஸ் ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், இதில் மோதிக் கொள்வதற்கு முன்பாக இந்த இரு அணிகளுமே குவாலிஃபயர் 1 போட்டியில் மோதி இருந்தது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் கொல்கத்தா அணி மிக எளிதாக வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தது.

தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளதால் குவாலிஃபயர் 1 தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுக்குமா அல்லது மீண்டும் ஒருமுறை அவர்களை வீழ்த்தி கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

- Advertisement 2-

இதனிடையே பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடங்கி அனைவரும் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பற்றி தங்களின் கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்தின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சனும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “டாஸ் என்பது 50 – 50 அளவில் வெற்றியை தீர்மானிக்கும். அதே வேளையில் போட்டியில் பனி எப்படி இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் எந்த அளவுக்கு மனநிலை மற்றும் தன்னம்பிக்கையுடன் இறுதி போட்டிக்கு வந்தார்கள் என்பது மிக முக்கியம். கொல்கத்தா அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை முதல் போட்டியிலே தோல்வியடைய செய்து நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறிய தன்னம்பிக்கை அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். மேலும் கடந்த மூன்று முதல் நான்கு நாட்கள் அவர்கள் தயாராகவும் அதிக நேரம் கிடைத்தது.

ஆனால் ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் ஆடிய விதம் பெரிதாக எனக்கு பிடிக்கவில்லை. அதில் தோல்வியடைந்தது நிச்சயம் கொல்கத்தாவுக்கு எதிராக அவர்களுக்கு ஒரு பாதகமாக இருக்கும் என்றே கருதுகிறேன்” என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்