- Advertisement 3-
Homeவிளையாட்டுபூரனை நம்புனோம்.. ஆனா குல்தீப் யாதவ் கதைய மாத்திட்டாரு.. தோல்வியின் காரணம் சொன்ன கே எல்...

பூரனை நம்புனோம்.. ஆனா குல்தீப் யாதவ் கதைய மாத்திட்டாரு.. தோல்வியின் காரணம் சொன்ன கே எல் ராகுல்..

- Advertisement 1-

கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இடம் பிடித்திருந்தது கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. இதற்கு முன்பாக அவர்கள் ஆடிய இரண்டு சீசன்களிலும் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியவில்லை. அதே வேளையில், லக்னோ அணி இதுவரை ஆடிய இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆப் வரை முன்னேற்றம் கண்டுள்ளது.

அதிக பலத்துடன் விளங்கும் லக்னோ அணி, இந்த முறை நிச்சயம் இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை தங்களின் மூன்றாவது சீசனிலேயே கைப்பற்ற முனைப்பு காட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் ராகுல், பூரன், ஸ்டாய்னிஸ், தேவ்தத் படிக்கல் என பல அதிரடி பேட்ஸ்மன்களும், மயங்க் யாதவ், நவீன் உல் ஹக் உள்ளிட்ட சிறப்பான பந்து வீச்சாளர்களும் அடங்கி உள்ளனர்.

மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலிலும் மூன்றாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை தங்களின் ஐந்தாவது போட்டியில் சந்தித்து இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் அறிமுகமான இளம் வீரர் ஜேக் ப்ரேஷர், 5 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனால், டெல்லி அணி 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டிப் பிடித்ததுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் கண்டிருந்தது. இந்த தோல்விக்கு பின் பேசிய லக்னோ கேப்டன் கே எல் ராகுல், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக இருந்தோம். நாங்கள் ஏற்படுத்திய நல்ல தொடக்கத்தை பயன்படுத்தி 180 ரன்கள் வரை அடித்திருக்க வேண்டும். பந்து வீச்சில் டெல்லி அணிக்கு இருந்த சாதகத்தை பயன்படுத்தி குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்தார்.

- Advertisement 2-

அதே போல புதிதாக ஒரு வீரர் களத்தில் வந்த ஆடும் போது எங்களுக்கு அவரை பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும். அதே வேலையை தான் ஜேக் பிரஷர் மிக அருமையாக பேட்டிங் செய்திருந்தார். நாங்கள் வார்னர் உள்ளிட்ட இரண்டு விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் எடுத்திருந்தோம். ஆனால் அதன் பின்னர் ரிஷப் பந்த் – ஜேக் ஆகியோர் செட் ஆகி போட்டியையும் எங்களிடமிருந்து மாற்றி விட்டனர்.

இப்படி ஒரு தோல்வி நடந்து விட்டால் முன்னரே ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கலாம் என்று தோன்றும். டெல்லியின் அக்சர் படேல் பந்து வீசும் போது பெரிதாக சுழலவில்லை என்பதால் நிச்சயம் பூரன் அவர்களுக்கு எதிராக நெருக்கடி ஏற்படுத்தி ரன்களை அடிப்பார் என்று நினைத்தேன். ஆனால் முதல் பந்திலேயே குல்தீப் அவரை அவுட் எடுத்து விட்டார்.

மயங்க் யாதவ் தற்போது நன்றாக மேம்பட்டு வருகிறார். அவர் நல்ல நிலையில் இருந்தாலும் உடனடியாக அவரை போட்டியில் இறக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இளம் வீரர் என்பதால் அவரது உடலை சரியாக பாதுகாத்து 100% அவர் ஃபிட்டாக இருக்கும் போது தான் ஆட வைப்போம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்