- Advertisement 3-
Homeவிளையாட்டுஅது பெரிய ஏமாற்றம் தான்.. ரோஹித் வேர்ல்டு கப் ஆடுறப்போ இதான் என்னோட பிளான்.. உண்மையை...

அது பெரிய ஏமாற்றம் தான்.. ரோஹித் வேர்ல்டு கப் ஆடுறப்போ இதான் என்னோட பிளான்.. உண்மையை உடைத்த ராகுல்..

- Advertisement 1-

கே எல் ராகுல் தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்த அணி தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பிளே ஆப் வரை முன்னேறி இருந்த லக்னோ அணி, ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் எலிமினேட்டர் சுற்றுடன் கிளம்பி இருந்தது.

அப்படி இரண்டு சீசன்களில் செய்த தவறை இந்த முறை சரி செய்து பட்டையைக் கிளப்புவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. முதல் 8 போட்டிகளில் ஐந்தில் வெற்றி கண்டு நல்ல ஃபார்மில் இருந்த லக்னோ, தங்களின் கடைசி லீக் போட்டிக்கு முன்பாக நடந்த 5 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறுவதில் தடுமாற்றம் கண்டதுடன் ஏறக்குறைய அந்த வாய்ப்பையும் தற்போது இழந்து விட்டது என்றே சொல்லலாம்.

மும்பை அணிக்கு எதிராக தங்களின் கடைசி லீக் போட்டியில் களமிறங்கி இருந்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். இந்த போட்டியில் வெற்றி பெறுவதுடன் நல்ல ரன் ரேட்டில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் மிக முக்கியமாக லக்னோவிற்கு பார்க்கப்பட்டது. அப்படி இருக்கையில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில், பூரன் மற்றும் கே எல் ராகுல் உதவியுடன் 214 ரன்களை சேர்த்திருந்தது.

இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் ரோஹித் ஷர்மா அற்புதமாக ஆடி 68 ரன்கள் எடுத்து அவுட்டாக, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். கடைசி கட்டத்தில் நமன் திர் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தாலும் மும்பை அணியால் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அவர்களின் பிளே ஆப் வாய்ப்பு தற்போது பறிபோயுள்ளது.

- Advertisement 2-

இதற்கு பின் பேசிய லக்னோ கேப்டன் கே எல் ராகுல், “ப்ளே ஆப் முன்னேறாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம் தான். இந்த தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் ஒரு பலமான அணியாக இருந்து அனைத்து ஏரியாக்களிலும் சிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஆனாலும் சில காயங்கள் காரணமாக அனைத்தும் மாறிவிட்டது. ஒட்டுமொத்தமாக நாங்கள் சிறப்பாக ஆடவில்லை என்பதும் உண்மைதான். மும்பை அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தை தான் எப்போதுமே நாங்கள் ஆட விரும்புகிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக பல போட்டிகளில் அதை செய்யவில்லை.

அணியில் உள்ள இளைஞர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இனி வரும் நாட்களில் நான் அதிகம் டி 20 போட்டிகள் ஆடப் போவதில்லை. மேலும் இந்த சீசனில் எனது பேட்டிங் குறித்து நிறைய விஷயங்களை நான்தெரிந்து கொண்டு அணியில் மீண்டும் இணைய என்ன தேவையோ அதை செய்வேன்.

அதேபோல பூரன் கடைசி வீரராக வந்து ஆடவில்லை. எங்கள் அணியில் இருக்கும் சர்வதேச வீரர்களை பொறுத்துதான் பேட்டிங் ஆர்டரை நாங்கள் தயார் செய்தோம். மூன்றாவது வீரராக ஸ்டாய்னிசும், அவருக்கு பின்னர் பூரனும் வரும் போது இரண்டு சர்வதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆடுவதை நாங்கள் பெரிதும் விரும்பவில்லை. நானும் எனது மாமனாரும் இணைந்து உலக கோப்பையில் ரோஹித் ஷர்மாவுக்காக ஆதரவுடன் இருக்க போகிறோம்” என கூறினார்.

சற்று முன்