- Advertisement -
Homeகிரிக்கெட்240 ரன் அடிச்சுருந்தாலும் அவங்க தான் ஜெயிச்சுருப்பாங்க.. அப்படி பண்ண வாய்ப்பே தரல... புலம்பிய கே...

240 ரன் அடிச்சுருந்தாலும் அவங்க தான் ஜெயிச்சுருப்பாங்க.. அப்படி பண்ண வாய்ப்பே தரல… புலம்பிய கே எல் ராகுல்..

-Advertisement-

லக்னோ அணி வீரர்கள் மட்டுமில்லாமல் அந்த அணியின் ரசிகர்களும் கூட சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் என்ன நடந்தது என்பதே ஒரு நிமிடம் விளங்காமல் தான் குழம்பி போயுள்ளனர். மிரட்டலான ஒரு அடியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா வெளிப்படுத்த கொஞ்சம் கூட அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திக்கித் திணறி போனது லக்னோ அணி.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பத்து ஓவர்களில் 60 ரன்களை தாண்டுவதற்கே அந்த அளவுக்கு சிரமப்பட்டது. இதனால் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூட சில ரசிகர்கள் ஊகங்களுடன் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். ஆனால் லக்னோ அணி பேட்டிங் முடிந்த சமயத்தில் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி அதிரடி காட்ட அவர்கள் 165 ரன்கள் எடுத்திருந்தனர்.

ஹைதராபாத் அணிக்கு இந்த இலக்கு குறைவு என்றாலும் இரண்டாவது பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காமல் இருக்கும் அந்த அணியின் பேட்டிங் வரிசையை லக்னோ அணி கலைத்து விடலாம் என்ற கண்ட கனவு தான் இந்த முறை பொய்யாகியுள்ளது. அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் ஆகியோர் முதல் பேட்டிங் செய்தால் எப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களோ அதே ஆட்டத்தை இந்த முறை இரண்டாவது இன்னிங்சில் கையில் எடுத்திருந்தனர்.

எந்த பந்து வீச்சாளராக இருந்தாலும் கிடைக்கும் பந்துகள் எல்லாம் சிக்ஸருக்கு வெளியே அனுப்புவதை வேலையாக இந்த போட்டியில் வைத்திருந்த இவர்கள் 9.4 ஓவர்களில் மேட்சையே முடித்து விட்டார்கள். பெரும்பாலான போட்டிகளில் 160 க்கு மேற்பட்ட ரன்களை எட்டுவதற்கு குறைந்தபட்சம் 15 முதல் 17 ஓவர்கள் வரை ஆகலாம்.

-Advertisement-

ஆனால் ஹெட், அபிஷேக் ஷர்மா சேர்ந்து செய்தது மேஜிக்கா இல்லை ஏதாவது தந்திரமா என்று கூட தெரியாமல் தான் லக்னோ அணி குழம்பி போயுள்ளது. இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல், “எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இது போன்ற பேட்டிங்கை டிவியில் தான் நாம் அதிகம் கண்டிருக்கிறோம். இது நம்ப முடியாத விசித்திரமான பேட்டிங்காக தான் இருந்தது. அவர்களின் பேட்டிங் திறனை பாராட்டியே ஆக வேண்டும். சிக்ஸ் அடிக்கும் திறனில் ஹெட் மற்றும் அபிஷேக் மிக கடினமாக உழைத்து வருகின்றனர்.

அவர்கள் இருவருமே இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் எந்த மாதிரி செயல்படும் என்பதே அறிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பே தரவில்லை. முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடியதால் அவர்களை கட்டுப்படுத்தவும் கடினமாக இருந்தது. தோல்வி அடையும் இடத்தில் இருக்கும் போது நீங்கள் எடுத்த முடிவுகள் தொடர்பான கேள்விகள் அதிகமாக உருவாகும்.

நாங்கள் 40 முதல் 50 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். பவர் பிளே ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அதன் பின்னர் அதிகமாக ரன் சேர்க்கவும் முடியவில்லை. ஆயுஷ் மற்றும் பூரன் இணைந்து 165 ரன்களை எட்டவும் உதவி இருந்தனர். ஆனால் நாங்கள் 240 ரன்கள் அடித்திருந்தால் கூட அவர்கள் நிச்சயம் சேசிங் செய்திருப்பார்கள்” என ராகுல் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்