- Advertisement -
Homeகிரிக்கெட்குராத் vs லக்னோ போட்டியில் சம்மந்தமே இல்லாமல் எண்ட்ரி கொடுத்த கோலி… இன்னும் கோபம் போகல...

குராத் vs லக்னோ போட்டியில் சம்மந்தமே இல்லாமல் எண்ட்ரி கொடுத்த கோலி… இன்னும் கோபம் போகல போல!

-Advertisement-

லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, இந்த சீசனின் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக நடந்து முடிந்தது. போட்டி முடிந்துவிட்டாலும் இன்னும் அந்த போட்டி சம்மந்தமான சர்ச்சைகள் ஓயவில்லை. மிகவும் லோ ஸ்கோர் மேட்ச்சான இந்த போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்ததும் கோலியும் லக்னோ அணி ஆலோசகர் கௌதம் கம்பீரும் காரசாரமாக பேசிக் கொண்டது கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் பற்றி  தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி கோலியிடம் கம்பீர் ‘நீ  என் வீரர்களிடம் என்ன சொன்னாய்?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு கோலி “உங்களிடம் நான் எதுவும் பேசாத போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள்” எனக் கேட்டுள்ளார்.

அதற்குக் கம்பீர் “நீ என் அணி வீரர்களை பற்றி அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என் குடும்பத்தைப் போன்றது.” எனக் கூறவே, பதிலுக்கு கோலி துடுக்காக “அப்படி என்றால் உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு கம்பீர் “நீ எனக்குக் கற்றுக் கொடுக்கிறாயா?” எனக் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக 360 டிகிரியில் பலராலும் விவாதிக்கப்பட்டு இப்போதுதான் ஓய்ந்துள்ளது.

ஆனால் கோலி, இன்னும் அந்த சம்பவத்தில் இருந்து வெளிவந்ததாக தெரியவில்லை. நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அப்போது லக்னோ அணியை சீண்டும் விதமாக கோலி சமூகவலைதளங்களில் குஜராத் அணிக்கு ஆதரவாக சில பதிவுகளைப் பகிர்ந்தார்.

-Advertisement-

போட்டியில் குஜராத், 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் குஜராத் அணி பேட்ஸ்மேன் சஹா சிறப்பாக பேட் செய்து 43 பந்துகளில் 81 ரன்கள் அதிரடியாக சேர்த்தார். அவரைப் பாராட்டும் விதமாக கோலி “என்ன ஒரு அருமையான பேட்ஸ்மேன்” என இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஸ்டோரியில் பகிர்ந்தார். அதே போல குஜராத் வீரர் ரஷீத் கான் பிடித்த ஒரு சிறப்பான கேட்ச்சைப் பாராட்டி, ”நான் பார்த்ததிலேயே ஒரு மிகச்சிறந்த கேட்ச்” என மற்றொரு ஸ்டோரியும் வைத்தார்.  இதெல்லாம் கோலி, லக்னோ அணியின் தோல்வியைக் கொண்டாடதான் செய்துள்ளார் என கிரிக்கெட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் எழ ஆரம்பித்துள்ளன.

-Advertisement-

சற்று முன்