- Advertisement -
Homeகிரிக்கெட்3 சீசனா எந்த ஐபிஎல் மேட்சிலும் நடக்காத விஷயம்.. ஆஹா, இத நாம கவனிக்கவே இல்லையே..

3 சீசனா எந்த ஐபிஎல் மேட்சிலும் நடக்காத விஷயம்.. ஆஹா, இத நாம கவனிக்கவே இல்லையே..

-Advertisement-

2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இன்னும் 20 நாட்களில் முடிய உள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருந்து வரும் ஐபிஎல் தொடர் அடுத்த 20 நாட்களிலும் விஸ்வரூபம் எடுத்து வாணவேடிக்கை நிகழ்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே பல்வேறு உலகத்தரமான சாதனைகளையும் இந்த ஐபிஎல் தொடரில் பல துடிப்பான வீரர்கள் நிகழ்த்தி வரும் நிலையில் இனி உள்ள நாட்களிலும் அது தொடரும் என்று தெரிகிறது. அதிக சதங்கள், அதிக சிக்ஸர்கள், அதிக முறை 250 க்கு மேல் அடித்த சீசன் என பல்வேறு சாதனைகளையும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தன்வசம் ஆக்கியுள்ளது. ஆனால் அதே வேளையில் ஒரு சில விமர்சனங்களும் இந்த ஐபிஎல் தொடரை சுற்றி இருந்து தான் வருகிறது.

இம்பாக்ட் பிளாயர் என்னும் விதிப்படி 11 வீரர்கள் மட்டும் இல்லாமல் புதிதாக ஒரு வீரர் கூட சப்ஸ்டியூட் என்ற பெயரில் அணியில் இடம் பெற்றுக் கொள்ளலாம். இதன் காரணமாக எட்டு முதல் ஒன்பது வீரர்கள் வரை பேட்ஸ்மேன்களாக இருந்து வருவதால் தங்கள் அணிக்கு நெருக்கடி தேவைப்படும்போது அதற்கேற்ற வகையில் ஒரு பந்துவீச்சாளரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் காரணமாக ரன் குவிப்பு என்ற அத்தியாயத்தை மட்டுமே ஐபிஎல் பேட்டிகளில் பெரும்பாலும் நம்மால் இப்போது பார்க்க முடிகிறது. இந்த விதியை மாற்ற வேண்டும் என ரோஹித் ஷர்மா தொடங்கி பலரும் தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்ந்து செயல்படும் என்றே தெரிகிறது. ஆனாலும் ஒரு பக்கம் ரசிகர்கள் இதுபற்றி விமர்சனத்தை முன் வைத்தாலும் இன்னொரு பக்கம் அதிரடி பிடித்த ரசிகர்கள் பலரும் இந்த விதியை விரும்பி தான் வருகின்றனர்.

-Advertisement-

இந்த நிலையில் தான் ஐபிஎல் போட்டியில் கடந்த மூன்று சீசன்களாக நடைபெறாத ஒரு சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். ஒரு போட்டியின் போது இரு அணிகளும் ஒரே ஸ்கோரை அடித்தால் சூப்பர் ஓவர் விதி ஐபிஎல் போட்டிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரே ஒரு ஓவரில் மட்டும் இரு அணிகள் பேட்டிங் செய்து அதில் அதிக ரன்கள் அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரை பலமுறை சூப்பர் ஓவர் போட்டிகள் நடந்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு சீசன் தொடங்கி இதுவரை ஒரு முறை கூட சூப்பர் ஓவர் போட்டிகள் கூட நடைபெறவில்லை. இத்தனை அதிரடி நிரம்பி இருந்த போதிலும் சூப்பர் ஓவர் போட்டிகளில் எந்த அணிகளும் எட்ட முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்