- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித், கோலி மாதிரி வந்துருக்க வேண்டியவன்.. தோனி தான் எல்லாத்துக்கும் காரணம்.. புலம்பிய மனோஜ் திவாரி..

ரோஹித், கோலி மாதிரி வந்துருக்க வேண்டியவன்.. தோனி தான் எல்லாத்துக்கும் காரணம்.. புலம்பிய மனோஜ் திவாரி..

- Advertisement 1-

தங்களிடம் சிறந்த திறமை இருந்த போதிலும் இந்திய கிரிக்கெட் அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல், அப்படியே சில போட்டிகளுடன் மறைந்து போன வீரர்கள் ஏராளம் பேர் இங்கே உள்ளனர். சமீபத்தில் கூட ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடினாலும், போட்டி அதிகமாக இருப்பதால் பலருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தான் போகிறது.

அந்த வகையில், பல வீரர்களின் பெயரை நாம் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் அதில் முக்கியமான ஒருவர் தான் மனோஜ் திவாரி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய அணிக்காக 12 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் ஆடி இருந்தார். அதன் பின்னர் இவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் கிடைக்காத போதிலும், தொடர்ந்து ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடர்களிலும் ஆடி வந்தார்.

இதற்கு மத்தியில், மேற்கு வங்க அரசியலில் நுழைந்த மனோஜ் திவாரி, அமைச்சராகவும் பணியாற்றி இருந்தார். இந்த நிலையில் தான், தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார் மனோஜ் திவாரி. இவர் தற்போது நடந்து வரும் ரஞ்சி தொடரில் பெங்கால் அணியை கேப்டனாக தலைமை தாங்கி இருந்த நிலையில், பீகார் அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்த போட்டி முடிவடைந்ததும் தனது ஓய்வை தொடங்கி விட்டார் மனோஜ் திவாரி. இதனிடையே, தோனி தலைமையில் இந்திய அணிக்காக ஆடி வந்த மனோஜ் திவாரி, அவரிடம் கேட்க நினைத்த கேள்வி பற்றி தற்போது தெரிவித்துள்ள விஷயம், கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்திருந்த மனோஜ் திவாரிக்கு அதன் பின்னர் தொடர்ந்து 14 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிகிறது.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில் தற்போது இது பற்றி பேசியுள்ள மனோஜ் திவாரி, “2011 ஆம் ஆண்டு நான் சதமடித்த போதிலும் ஏன் எனக்கு அதன் பின்னர் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என தோனியிடம் கேட்க விரும்புகிறேன். ரோஹித் ஷர்மா, விராட் கோலி போல ஒரு பெரிய ஹீரோ ஆகும் திறமை என்னிடம் இருந்தது.

ஆனால் என்னால் அப்படி ஆக முடியவில்லை. இன்று நிறைய பேருக்கு அதிகம் வாய்ப்பு கிடைப்பதை நான் டிவியில் பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது” என உடைந்து போய் தெரிவித்துள்ளார் மனோஜ் திவாரி.

சற்று முன்