- Advertisement 3-
Homeவிளையாட்டுஅந்த இடத்துல தான் நாங்க மேட்ச் தோத்தோம்.. வேதனையுடன் சொன்ன மேத்யூ வேட்.. இந்தியா ஜெயிச்ச...

அந்த இடத்துல தான் நாங்க மேட்ச் தோத்தோம்.. வேதனையுடன் சொன்ன மேத்யூ வேட்.. இந்தியா ஜெயிச்ச ரகசியம்..

- Advertisement 1-

உலக கோப்பைத் தொடர் முடிந்த கையுடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டி 20 தொடரில் மோதி இருந்தது. இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ள சூழலில், இந்திய அணி தொடரை கைப்பற்றி பட்டையைக் கிளப்பி உள்ளது. இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக ஆடியதால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி அற்புதமாக செயல்பட்டிருந்தது.

இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி இன்று (03.12.2023) நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்கத் திணறியது. இதனையடுத்து, 3 வது வீரராக வந்த ஷ்ரேயஸ் ஐயர், மிக அற்புதமாக ஆடி ரன் சேர்த்தார். அவரது பங்களிப்பால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கிய ஆடிய ஆஸ்திரேலியா அணி, அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவும் செய்தது. ஒரு பக்கம் ரன்னையும் அவர்கள் வேகமாக சேர்க்க, இன்னொரு புறம் விக்கெட்டுகளும் விழுந்து கொண்டே இருந்ததால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற விறுவிறுப்பு ரசிகர்கள் மத்தியில் உருவானது. ஆஸ்திரேலிய வீரர் பென் மெக்டெர்மோட் அதிரடியாக ரன் குவித்த சூழலில் அவர் அவுட்டானதும் இந்திய ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆனாலும் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் பவுண்டரிகளை அடித்து மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தார். கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் அற்புதமாக வீச, முதல் 3 பந்துகளில் ரன் எதுவும் சேர்க்காமல் வேட் அவுட்டானார். இதனால், இந்திய அணியின் வெற்றி உறுதியாக, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4 – 1 என்ற கணக்கில் வென்றது. இதனால், பென் மெக்டெர்மோட் மற்றும் மேத்யூ வேடின் அதிரடி ஆட்டம் வீணானது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அசத்திய அக்சர் பாடல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

- Advertisement 2-

தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட், “நாங்கள் இன்று சிறப்பாக பந்து வீசினோம். ஆனால், பேட்டிங்கின் போது கடைசி ஐந்து முதல் ஆறு ஓவர்கள் மிகுந்த ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இன்று நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்