- Advertisement 3-
Homeவிளையாட்டுமுதல் மேட்ச்லயே அந்த விக்கெட்டை எடுத்தப்போ.. நான் ஃபாஸ்ட் பால் போடவும் இதான் காரணம்.. சம்பவம்...

முதல் மேட்ச்லயே அந்த விக்கெட்டை எடுத்தப்போ.. நான் ஃபாஸ்ட் பால் போடவும் இதான் காரணம்.. சம்பவம் செய்த மயங்க் யாதவ்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே எப்போதும் இளம் வீரர்கள் அதிகம் பேர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச அணிக்கான பாதையில் அடித்தளம் போடவும் செய்வார்கள். அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் தொடரிலும் கூட சமீர் ரிஸ்வி, ஹர்ஷித் ராணா என பல இளம் வீரர்களும் கூட தங்களுக்கு கிடைக்கும் சிறிய சிறிய வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி அணியின் வெற்றிக்காக உழைக்கவும் செய்கிறார்கள்.

அப்படி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியிலும் கூட ஒரு இளம் வீரரின் அறிமுகம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் தேர்வாகும் வீரர்கள் ஐபிஎல் தொடரின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஒரு குழுவையும் பிசிசிஐ நியமித்து அனைத்து போட்டிகளையும் உற்று கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனால், இந்த தொடரை தங்களின் எதிர்கால வாய்ப்பாகவும் கருதி பலரும் தங்களின் கடின உழைப்பை போட்டு தயாராகி வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியிலேயே தனது பந்து வீச்சால் அனைவரையும் அசரடித்துள்ளார் மயங்க் யாதவ்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இவர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் அறிமுகமாகி இருந்தார். இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 100 ரன்கள் கடந்திருந்த நிலையில் தான், பேர்ஸ்டோ உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை லக்னோ பக்கம் திருப்பி வெற்றி பெற வைத்திருந்தார் மயங்க் யாதவ்.

- Advertisement 2-

அது மட்டுமில்லாமல், சுமார் 155 கி. மீ வேகத்தில் பந்து வீசி இந்த தொடரின் வேகப்பந்தை வீசிய பெருமையையும் பெற்றுள்ளார் மயங்க் யாதவ். 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.

தனது ஐபிஎல் அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதினை வென்றதால் உற்சாகசத்துடன் பேசியிருந்த மயங்க் யாதவ், “இப்படி ஒரு அற்புதமான அறிமுகமாக எனக்கு அமையும் என நான் நினைத்தே பார்க்கவில்லை. போட்டிக்கு முன்பாக கொஞ்சம் பதற்றத்துடன் இருந்தேன். என்னுடைய வேகத்தில் தொடர்ந்து நிலையாக இருந்து ஸ்டம்பை நோக்கியும் பந்து வீசினேன்.

முதலில் ஸ்லோ பந்துகளை வீசலாம் என நினைத்தேன். ஆனால் பின்னர் வேகப்பந்து வீசினால் போதும் என முடிவு எடுத்தேன். பேர்ஸ்டோவை முதல் விக்கெட்டாக எடுத்ததை ஸ்பெஷலாக உணர்ந்தேன். இந்த இளம் வயதிலேயே அறிமுகமானதும் சிறப்பாக இருந்தது. சில குறிக்கோள்கள் உள்ளது. ஆனால் காயம் அடையாமல் இருந்தால் அதனை சாதிப்பேன் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்