- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த வருஷம் ஆர்சிபிக்கு வாய்ப்பில்ல.. அவங்கள நம்புனா தான் கப் ஜெயிக்க முடியும்.. உண்மையை உடைத்த...

இந்த வருஷம் ஆர்சிபிக்கு வாய்ப்பில்ல.. அவங்கள நம்புனா தான் கப் ஜெயிக்க முடியும்.. உண்மையை உடைத்த இந்திய வீரர்..

- Advertisement 1-

இந்த சீசனின் ரியல் கிளாசிகோ இனிமேல் தான் நடக்கப்போகிறது என அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோத இருக்கும் போட்டியை குறிப்பிட்டு வருகின்றனர். ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் நான்காவது இடத்தில் சென்னை அல்லது ஆர்சிபி அணி முன்னேறும் என தெரிகிறது.

சமீபத்தில் குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆட இருந்த போட்டி மழை காரணமாக ரத்தானதால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனர். இதன் காரணமாக டெல்லி அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்க, லக்னோ அணிக்கும் இதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அவர்களுக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில் அதில் வெற்றி பெற்றாலும் கூட ரன் ரேட் மிகக் குறைவாக இருப்பது பெரிய பிரச்சினையாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதற்கு மத்தியில் தான் நான்காவது இடத்திற்கு முன்னேற போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூர் அணி மோதும் மேட்ச் இருக்கும். இதில் வெற்றி பெறும் அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணி போட்டியை நெருங்கி தோல்வி அடைந்தால் அவர்கள் கூட உள்ளே நுழைவார்கள் என தெரிகிறது.

இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என பலரும் கருத்து கூறி வரும் நிலையில் ஆர்.சி.பி இந்த முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். “ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதாவது ஒரு மாத காலம் ஒரு வெற்றியும் பெறாமல் இந்த தொடரில் இருந்து வந்தனர். அதன் பெயரில் தான் அவர்கள் இந்த அளவுக்கு சரிந்து போய் உள்ளனர்.

- Advertisement 2-

ஆனால் அதே வேளையில் அவர்கள் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கொடுத்த கம்பேக்கை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே நேரத்தில் அவர்களின் பிளே ஆப் வாய்ப்பு மிக குறைவாக தான் உள்ளது. மேலும் இப்படி தொடர்ச்சியாக தோல்வியடைந்தது ஆர்சிபிக்கு நல்ல பாடமாக அடுத்த சீசனுக்கு அமைந்துள்ளது.

மேக்ஸ்வெல் உள்ளிட்ட பல வெளிநாட்டு வீரர்களை குறியாக வைத்திருக்கும் ஆர்சிபி, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளை போல இந்திய வீரர்களையும் அதிகம் ஏலத்தில் எடுக்க வேண்டும். ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா போன்று சிறந்த இந்திய வீரர்களை சரியாக தேர்வு செய்து தங்கள் அணியில் சேர்த்தால் நிச்சயம் ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை அடுத்த ஆண்டு வெல்ல முடியும்” என கைப் கூறியுள்ளார்.

சற்று முன்