- Advertisement -
Homeவிளையாட்டுஐபிஎல்ல என் பந்து எடுபடாம போனதுக்கு காரணம்.. உடம்பு சரியில்லாம தான் ஆடுனேன்.. உருகிய சிராஜ்..

ஐபிஎல்ல என் பந்து எடுபடாம போனதுக்கு காரணம்.. உடம்பு சரியில்லாம தான் ஆடுனேன்.. உருகிய சிராஜ்..

- Advertisement-

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த ஆர்சிபி மற்றும் அதன் ரசிகர்களுக்கு கடந்த மூன்று போட்டி வெற்றிகள் மிகப்பெரிய உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். தற்போது அவர்கள் வெளிப்படுத்தி வரும் ஃபார்மை ஒரு சில போட்டிகளுக்கு முன்பாக காட்டியிருந்தால் நிச்சயம் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறும் அணிகளில் ஒன்றாகவும் பல அணிகளுக்கு சவால் நிறைந்த அணியாகவும் விளங்கி இருக்கலாம்.

ஆனால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டும் கை கொடுக்காமல் போனதன் காரணமாக தோல்விகளையும் அவர்கள் பெற்றுக் கொண்டே இருந்தனர். இதனிடையே திடீரென விஸ்வரூபம் எடுத்து ஹைதராபாத் அணியை வீழ்த்தி இருந்த ஆர்சிபி, அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக குஜராத் அணியையும் வீழ்த்தி இருந்தது.

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குஜராத் அணியை வெறும் 147 ரன்களில் கட்டுப்படுத்தியதுடன் பேட்டிங்கிலும் அதிரடி காட்டி இருந்த பெங்களூர் அணி, நடுவில் சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் பங்களிப்பால் வெற்றியையும் 14 வது ஓவர்களிலேயே பெற்றிருந்தனர்.

கில் மற்றும் சஹா ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். இதற்குப் பின் அவர் பேசுகையில், “கடந்த இரண்டு நாட்கள் நான் உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்து வந்தேன். என்னால் இன்று ஆட முடியாது என்று தான் முதலில் நினைத்திருந்தேன். ஆனாலும் எனது அணிக்காக சிறப்பாக ஆடி பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

- Advertisement-

இந்த சீசனில் புது பந்தை வைத்து நிறைய பயிற்சிகளை செய்து அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளேன். காலையில் எந்திரித்த போது கூட என்னால் ஆட முடியாது என்றும் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கண்விழித்த பின்னர் நிச்சயம் அதையெல்லாம் தாண்டி என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் என விரும்பி செய்து முடித்துள்ளேன்.

உலக கோப்பை தொடருக்கு பின் அதிகமாக வெள்ளைப் பந்தில் ஆடாமல் இருந்து வந்ததால் தான் இந்த சீசனில் ஆரம்பத்தில் கொஞ்சம் ரிதம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் தொடர்ந்து பயிற்சிகளையும் கடினமாக உழைத்ததன் காரணமாக அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஒவ்வொரு பந்திற்கும் நீங்கள் இங்கே உங்களின் 110 சதவீதத்தை கொடுக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது” என சிராஜ் கூறினார்.

சற்று முன்