- Advertisement 3-
Homeவிளையாட்டுஉலகக்கோப்பை இறுதிப்போட்டி.. தோனியை தான் பின்பற்ற போகிறோம்.. ரோகித் சர்மா ஓபன் பேட்டி.. அதுலதான் ட்விஸ்ட்...

உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. தோனியை தான் பின்பற்ற போகிறோம்.. ரோகித் சர்மா ஓபன் பேட்டி.. அதுலதான் ட்விஸ்ட் இருக்கு

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடவுள்ளது. இதனையொட்டி இரு அணிகளை சேர்ந்த வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது, இத்தனை நாட்களாக 10 போட்டிகளில் எப்படி விளையாடினோமோ, அதேபோல தான் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் விளையாடப் போகிறோம். இறுதி போட்டி என்பதால் எதையும் நாங்கள் புதிதாக முயற்சிக்கவோ, பரிசோதிக்கவோ செய்ய போவதில்லை.

2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியின் போது அப்போது கேப்டனாக இருந்த எம்எஸ் தோனியும் எந்த வித்தியாசமான மெசேஜையும் எங்களுக்கு கூறவில்லை. இத்தனை நாட்கள் எப்படி விளையாடினோமோ, அப்படியே விளையாடுவோம் என்றே கூறினார். வீரர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் எந்த பேச்சையும் கூட தயாரிக்கவில்லை.

வழக்கமாக போட்டிக்கு முன் என்ன பேசுவோமோ அதனை தான் மீண்டும் செய்யப் போகிறோம். அதே ஆலோசனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை தான் நடக்கப் போகிறது. அதேபோல் இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு வழிநடத்தி செல்வேன் என்று ஒருநாளும் நான் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால் பெரிய கனவுகளை காணும் போதுதான், பெரிய விஷயங்கள் நடக்கும்.

- Advertisement 2-

அதனால் நாளை போட்டியை நினைத்து நாங்கள் பெரிதாக அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்ள விரும்பவில்லை. நிதானமாகவும், போட்டியின் மீது மட்டுமே கவனத்தையும் வைக்க விரும்புகிறேன். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளார்கள். அவர்களை பற்றி எங்களுக்கும், எங்களை பற்றி அவர்களுக்கும் நன்றாக தெரியும்.

அதனால் அவர்களை சாதாரண நினைக்கவில்லை. அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் பிட்சை நாளை பார்த்தபின் தான் பிளேயிங் லெவனை முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்