- Advertisement 3-
Homeவிளையாட்டுபயம் காட்டிய அசுதோஷ்.. கூலாக டீல் செய்த ஹர்திக்.. கடைசி ஓவரில் மும்பை அணி செய்த...

பயம் காட்டிய அசுதோஷ்.. கூலாக டீல் செய்த ஹர்திக்.. கடைசி ஓவரில் மும்பை அணி செய்த மேஜிக்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டி மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மூன்று தோல்விகளை சந்தித்திருந்த மும்பை இந்தியன்ஸ், அதிலிருந்து மீண்டு டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளை வீழ்த்தி இருந்த சூழலில் தான் சென்னைக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தோல்வி காணும் நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆறு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்ற மும்பை அணி, ஏழாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடி இருந்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் சாம் குர்ரான் மீண்டும் ஒருமுறை அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார். தொடர்ந்து இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸை வென்று பந்து வீச்சினைத் தேர்வு செய்திருந்தனர்.

அதன்படி ஆடிய மும்பை அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன், 8 ரன்களில் அவுட் ஆகி இருந்தார். இதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்திருந்த நிலையில் 53 பந்துகளில் 78 ஏழு ஃபோர்கள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 78 ரன்கள் சேர்த்து அவுட்டாகி இருந்தார். அவருடன் இணைந்து நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்த ரோஹித் ஷர்மா, 36 ரன்கள் சேர்க்க, பின்னர் வந்த இளம் வீரர் திலக் வர்மா, 18 பந்துகளில் 34 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

அனைத்து வீரர்களுமே நல்லதொரு பங்களிப்பை அளித்திருந்ததால் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து தங்களின் சொந்த மைதானத்தில் இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கி இருந்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

- Advertisement 2-

பும்ரா மற்றும் கோட்ஸி ஆகிய இருவருமே தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற பஞ்சாபின் பேட்டிங் ஆர்டர் நிலைகுலைந்து போனது. சாம் குர்ரான் 6 ரன்களிலும், பிரப்சிம்ரன்சிங் கோல்டன் டக்கிலும், ரிலீ ரவுசவ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் தலா 1 ரன் மட்டும் எடுத்து அவுட்டாகி இருந்தனர். இதன் பின்னர் அணியின் ஸ்கோர் 49 ரன்கள் ஆன போது ஹர்ப்ரீத் சிங் பாட்டியா 13 ரன்களில் அவுட்டானார்.

அதே போல, ஜிதேஷ் ஷர்மா 9 ரன்களிலும் அவுட்டாக, சஷாங்க் சிங் வழக்கம் போல அதிரடி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தார். இதனால், பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது.

சஷாங்க் சிங் 41 ரன்களில் அவுட்டாக, கடைசி 8 ஓவர்களில் ஏறக்குறைய 80 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலை இருந்தது. பஞ்சாபின் கைவசம் 3 விக்கெட்டுகளே இருந்ததால் அவர்கள் தோல்வி அடைந்து விடுவார்கள் என்று தான் அனைவரும் கருதினர். ஆனால், அசுதோஷ் ஷர்மா சிக்ஸர்களை நாலாபுறமும் பறக்க விட்டிருந்தார்.

அப்படி இருக்கையில், கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப்பிற்கு 25 ரன்கள் தேவைப்பட, 28 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்திருந்த அசுதோஷ் ஷர்மா அவுட்டானார். இதனால், மீண்டும் போட்டியில் பரபரப்பு ஏற்பட, கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் வேண்டுமென்ற நிலையும் உருவானது. ஹர்திக் வீசிய 19 வது ஓவரில் ஒரு சிக்சருடன் 11 ரன்கள் சேர்க்கப்பட, ஹார்ப்ரீத் பிரார் அவுட்டானார்.

தொடர்ந்து உச்சகட்ட பரபரப்பில் ஒரு விக்கெட் கைவசம் இருக்க ஆடிய பஞ்சாப் அணி, 2 வது பந்தில் ரபாடா விக்கெட்டை இழக்க, அவர்கள் 183 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர். இதனால் பரபரப்பான போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது.

சற்று முன்